மூக்கின் வழியே கரோனா தடுப்பு மருந்தை செலுத்தி சோதிக்கும் தாய்லாந்து அரசு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 14, 2021

மூக்கின் வழியே கரோனா தடுப்பு மருந்தை செலுத்தி சோதிக்கும் தாய்லாந்து அரசு


நாசித் தெளிப்பான் எனப்படும் மூக்கில் மருத்தை தெளித்து அதன்(Nasal Spray) மூலம் செலுத்தப்படும் இரண்டு வகையான கோவிட்-19 தடுப்புமருந்துகளை, தாய்லாந்து சோதிக்கத் தொடங்கியுள்ளது.

இந்த ஆண்டின் இறுதிக்குள், அந்தச் சோதனை தொடங்கும் எனக் கூறப் பட்டது.

அந்தப் புதுவகைத் தடுப்புமருந்து கள், தாய்லாந்தின் தேசிய மரபணுப் பொறியியல், உயர்தொழில்நுட்ப நிலை யத்தால் உருவாக்கப்பட்டுள்ளன.

அந்நாட்டு, உணவு, மருந்துக் கட்டுப் பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித் தால், மனிதர்களிடம் சோதனை தொடங் கும்.

சோதனையின்போது, டெல்ட்டா வகைக் கிருமிக்கு எதிரான தடுப்பு மருந் தின் செயல்திறனும் சோதிக்கப்படும் என்று கூறப்பட்டது.

சோதனைகள் வெற்றிகரமாக முடி வடைந்தால், தடுப்புமருந்துகள் அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் பெருமளவில் உற்பத்தி செய்யப்படும் என்று தெரிவிக் கப்பட்டது.

தனிநபர்களைக் கிருமி தொற்றும் போது, மூக்கு ஒரு முக்கிய நுழைவாயி லாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

எனவே, நாசித் தெளிப்பான்கள் மூலம் செலுத்தப்படும் தடுப்புமருந்து கள் அதிகச் செயல்திறனைக் கொண் டிருக்கும் என்று நம்பப்படுகிறது.

தாய்லந்தில் தற்போது Sinovac, AstraZeneca, Sinopharm  ஆகியவற் றின் தடுப்புமருந்துகள் பயன்படுத்தப் படுகின்றன.

No comments:

Post a Comment