தேசிய கீதங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 14, 2021

தேசிய கீதங்கள்

 நாட்டு மக்கள் தமது நாட்டின் மீது அன்பும், நாட்டுப் பற்றும் கொண்டு பாடப்படும் உணர்ச்சிமிக்கப் பாடல் தேசியகீதம் ஆகும். தேசியகீதம் அல்லது நாட்டுப்பண் மரபு வழியாக அல்லது அரசால் அறிவிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இருக்கும்.

1568 முதல் பாடப்பட்டு 1957களில் எழுதப்பட்டதாக கருதப்படும். டச்சு நாட்டின் எட்வில் எம்ஸ் என்ற நாட்டுப்பண் உலகிலேயே பழைமையானது.

உலகிலேயே மிகச் சிறிய தேசிய கீதம் உகாண்டா நாட்டினுடையது.

உலகிலேயே மிக நீளமான தேசிய கீதம் கிரீஸ் நாட்டினுடையது.

சைப்ரஸ் நாடு தனக்கென தேசிய கீதத்தை கொண்டிராமல் கீரீஸ் மற்றும் துருக்கி நாட்டின் தேசிய கீதங்களை பயன்படுத்திக் கொள்கிறது.

 தேசிய கீதங்களின் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளுமே தங்களது நாட்டின் பெருமையை புகழ்பாடுகின்றன, ஆனால் பிரிட்டன் அரசு மட்டும் தங்களின் அரசியின் பெருமையை புகழ்பாடுகிறது. இதற்கு காரணம் பிரிட்டன் இதுவரை எந்த ஒரு அரசிடமும் அடிமைப்பட்டு இருந்ததில்லை. ஆகையால் அது தொடர்ந்து தொன்று தொட்டு ஒரே பாடலை பாடி வருகிறது. ஆனால் இதர நாடுகள் அனைத்தும் பெரும்பாலும் காலனி ஆட்சி, மன்னராட்சி மற்றும் கொடுங்கோல் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்று சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் புதிய நாடுகளாக உருவானதால் அந்த நாடுகளின் விடுதலைக்கும் மக்களாட்சிக்கும், ஜனநாயகத்திற்கும் போராடியவர்களின் தியாகங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் நாடுகளின் புகழைப் போற்றும் வண்ணம் அமைக்கப்பட்டது.

எடுத்துக்காட்டாக பங்களாதேஷ் தேசிய கீதம், எங்கள் தங்கவங்கமண்ணே உன்னை நாங்கள் அன்பு செய்கிறோம் என்று உள்ளது. அதே போல் இலங்கை தேசிய கீதம், எனது சிறிலங்கா அன்னையே என்று வரும், அதே போல் கனடா நாட்டின் தேசிய கீதம் கனடாவே எங்கள் வீடும் நாடும் நீ என்றும். ஜெர்மனியின் தேசிய கீதம் ஹிட்லரின் கொடுங்கோல் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்று இரண்டு ஜெர்மன் நாடாக பிரிந்து மீண்டும் ஒன்று பட்ட பிறகு ஒற்றுமை நீதி சுதந்திரம் என்றும் உள்ளது

அதே நேரத்தில் பொதுவுடைமை நாடாக இன்றும் திகழும் சீனாவில் புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் வாசகமான முன்னேறிச் செல்லுங்கள் தோழர்களே என்றவாசகத்தை துவக்கத்தில் கொண்டதாக தேசிய கீதம் உள்ளது.

ஜப்பான் தேசிய கீதம் வித்தியாசமானது, ஜப்பானே என்றும் இருக்கவேண்டும். மண் பாறையாகி அந்தப்பாறை மண்ணாகி அதன் மீது பாசிபடிந்து அந்தப்பாசிகள் அழியும் வரை நீ இருக்கவேண்டும் என்று அதன் தேசிய கீதம் உள்ளது, அதாவது இந்த உலகம் உள்ளவரை ஜப்பான் அமைதியாக இருக்கவேண்டும் என்று எழுதப்பட்டுள்ளது

No comments:

Post a Comment