ஒற்றைப் பத்தி - மாங்காய் மடையர்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 22, 2021

ஒற்றைப் பத்தி - மாங்காய் மடையர்கள்!

அண்டப் புளுகு என்று கேள்விப்பட்டு இருக்கிறோம். மாங்காய் மடையன் என்று கூட சொல்லுவது உண்டு. மாங்காய்க்கும் மடையனுக் கும் என்ன உறவு - என்ன தொடர்பு என்று யாம் அறியோம்!

தமிழன் ஏற்படுத்திய 'குமுதம்' ஒரு பார்ப்பனர் கைக்குள் சிக்கிய நிலையில் வாரந்தோறும் - காஞ்சி குச்சி முனியைப் பற்றிக் கொட்டி அளக்கும் அளப்பு இருக் கிறதே - சாதாரணமானதல்ல.

படிப்பவர்களை எல்லாம் மாங்காய் மடையன் என்று கருதுகிறார்கள் போலும்.

'தீண்டாமை க்ஷேமகரமா னது' என்று கூறும் ஒருவரை மகான் என்றும், ஜெகத் குரு என்றும் துவி ஜாதியினர் தூக்கித் துதி பாடுகிறார்கள் அல்லவா!  அந்த ஆசாமி யான சந்திரசேகரேந்திர சரஸ் வதி என்ற ஒருவர் இருந்தார் அல்லவா - அவர் சாத்த னூரில் முகாமிட்டு இருந்தா ராம்.

அவரைத் தரிசிக்க ஒரு கணவன் மனைவி இருவரும் வந்தார்களாம்! கல்யாணம் கட்டிப் பல ஆண்டுகள் ஆகி இருந்தும் கருத்தரிக்கவில் லையாம்.

இந்த நிலையில் தம்மை தரிசிக்க வந்த அந்த பெண் மணியிடம் மட்டைத் தேங் காய் இரண்டினை எடுத்து 'இதை மடியில் வாங்கிக்கோ' என்று தம் திருக்கரத்தால் கொடுத்தாராம்.

ஓர் ஆண்டு கழித்து அதே சாத்தனூருக்கு அந்தக் குச்சி முனிவர் வந்தபோது அதே கணவன், மனைவி இருவரும் வந்து, தாங்கள் கொடுத்த மட்டைத் தேங்காய் ஆசியால் கருவுற்று குழந் தைப் பிறந்ததை மகிழ்ச்சி யுடன் தெரிவித்தார்கள் என்று 'குமுதம்' (25.8.2021) கதை விட்டுள்ளது.

பார்ப்பனர்கள் தங்களில் ஒருவரைப் பெரிய ஆளாகத் தூக்கி நிறுத்தி, அவர் பெறும் செல்வாக்கின் மூலம் அந்தச் சமூகம் பல நன்மைகளைப் பெறும் தந்திர உபாயத்தைக் கையாளக் கூடியவர்கள் என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டு.

மட்டைத் தேங்காயைக் கொடுத்தால் கருவுண்டாகும். மட்டையில்லாத உரித்த தேங்காயை கொடுத்தால் என்ன கிடைக்கும் என்று அடுத்த 'குமுதம்' இதழில் வெளியிட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

ஓர் உண்மை தெரியுமா? மந்திர தந்திரம் - மாயா ஜாலங்களில் நம்பிக்கை இல்லாதவர் சங்கராச்சாரியார். அதற்குச் சாயிபாபா மாதிரி வித்தைகள் தெரிந்திருக்க வேண்டுமே - அதனால்தான்!

ஆனாலும் அப்படிப்பட்ட ஆசாமி மீதே அற்புதத்தைத் திணிக்கும் பார்ப்பன வரதர் களைப் பற்றி என்ன நினைப்பது!

-  மயிலாடன்

No comments:

Post a Comment