உழைப்பால் என் வண்டி ஓடுகிறது; 'கைராசி'மீது நம்பிக்கை கிடையாது சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 9, 2021

உழைப்பால் என் வண்டி ஓடுகிறது; 'கைராசி'மீது நம்பிக்கை கிடையாது சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

புதுடில்லி, ஆக.9 உழைப்பினால் தான் என் வண்டி ஓடுகிறது. 'கைராசி' மீது எனக்கு நம்பிக்கை இல்லை என்று சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் நினைவு நாளையொட்டி, கடந்த ஆண்டு கலைஞர் நினைவு பன்னாட்டு மெய்நிகர் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.கலைஞரின் 3-ஆவது ஆண்டு நினைவு தினத்தை யொட்டி, 2-ஆவது ஆண்டாக கலைஞர் நினைவு பன்னாட்டு மெய்நிகர் மாரத்தான்போட்டியை, மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் ஏற்பாடு செய்துள்ளார். இதில் பங்கேற்பவர்களுக்கான முன்பதிவு தொடங்கியது.

உதயநிதி ஸ்டாலின்

தி.மு.. இளைஞரணி செயலாள ரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.., சென்னை மெரினா கடற்கரை யோரம்  அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நினைவிடத்தில் முன் பதிவை தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே. சேகர் பாபு, சி.வி.கணேசன், தயாநிதி மாறன் எம்.பி. உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்பதிவை தொடங்கி வைத்த உதயநிதி ஸ்டாலின்,  இணையதளத்தில் முதலில் முன்பதிவு செய்த 12 பேருக்கு அதற்கான ரசீதையும் வழங்கினார்.மாரத்தான் போட் டிக்கு முன்பதிவு செய்வதற்கு ரூ.300 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட் டுள்ளது. இந்த பதிவின் மூலம் வரும் தொகையை கரோனா நிவாரண பணிகளுக்காக, முதல்-அமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கு வழங்க திட்டமிட்டிருக்கின்றனர்.

கரோனா வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்றி 5, 10 மற்றும் 21 கி.மீ. ஆகிய 3 பிரிவுகளில் எதி லாவது ஒன்றில் பங்கேற்று, அதற் கான செயலியில் குறிப்பிட்ட கி.மீ. தூரம் ஓடியதற்கான பதிவை ஸ்கிரீன்சாட் எடுத்து முன்பதிவு செய்த இணையதளத்தில் பதிவேற் றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள் ளனர். பதிவுசெய்த உடனேயே அதற்கான சான்றிதழையும் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். இதில் பங்கேற்றவர்களுக்கான பதக் கங்கள் 38 மாவட்டங்களில், அமைச் சர்கள் மூலமாக வழங்கப்படும். அதேபோல், வெளிநாடுகளில் இருந்து பங்கேற்பவர்களுக்கு கூரியர் மூலமாகவும், வெளிமாநிலங் களில் இருந்து பங்கேற்றால் அஞ்சல் மூலமாகவும் பதக்கங்கள் அனுப்பப்பட இருக்கின்றன.

கைராசி மீது நம்பிக்கை கிடையாது

நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப் பினர் உதயநிதி ஸ்டாலின்  பேசிய தாவது:- அமைச்சர் மா.சுப்பிரமணியன், என்னை 'கைராசிக்காரர்' என்று சொன்னார். எனக்கு 'கைராசி' மீது நம்பிக்கை கிடையாது. உழைப்பு மீதுதான் நம்பிக்கை இருக்கிறது. நான் படப்பிடிப்புக்கு செல்வதற்காக உடற்பயிற்சி அதிகம் செய்ய வேண்டும். ஆனால் என்னால் அது முடிவதில்லை. இப்படி இருக்கையில் மா.சுப்பிரமணியன் ஓடுவது, அது தொடர்பான அவருடைய காட்சிப் பதிவுகளை பார்க்கும்போது எனக்கு வியப்பாக இருக்கும். துடிப்பாக அரசியலில் பணிபுரியும் அவருக்கு, எப்படி நேரம் கிடைக்கிறது? என்று நினைக்கத் தோன்றும்.

அதிகமானோர் முன்பதிவு செய்யவேண்டும்

சென்னை மட்டுமல்லாது, வெளி நாடுகளிலும் ஓடிக்கொண்டிருந் தார். இப்போது ஆய்வு என்ற பெயரில் அரசு அதிகாரிகளையும் சேர்த்துக்கொண்டு ஓடுகிறார். அந்த அளவுக்கு பிரமிப்பான அமைச்சராக இருக்கிறார். கலைஞர் நினைவிடத்தில் இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைப்பது மகிழ்ச்சியை தருகிறது. பெருமையை கொடுக் கிறது.கடந்த ஆண்டு இந்த போட் டியின் முன்பதிவு மூலம் வந்த தொகையான ரூ.23 லட்சத்து 41 ஆயிரத்து 726-அய் கடந்த அரசின் நிதிச்செயலாளரிடம் கொடுத் தோம். இந்த முறை நம்முடைய தலைவரிடம் நேரடியாக கொடுக்க இருக்கிறோம். ஆனால் இந்த தொகை போதாது. எனவே அதிகமானோர் இதில் முன்பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதனைத்தொடர்ந்து கலைஞர் நினைவுநாளையொட்டி நடந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று, வேலைவாய்ப்பை பெற் றவர்களுக்கு உறுதியாணையை கலைஞர் நினைவிடத்தில் வைத்து சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

No comments:

Post a Comment