கலைஞரின் அருமருந்து எது? - இன்பம் எது? (2) - வாழ்வியல் சிந்தனைகள்-கி.வீரமணி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 9, 2021

கலைஞரின் அருமருந்து எது? - இன்பம் எது? (2) - வாழ்வியல் சிந்தனைகள்-கி.வீரமணி

கலைஞர் முதல் அமைச்சராக இருந்தபோது உற்சாகம் பெற்றது எப்படி? எதன்மூலம் அவரது ஆளுமை - ஆட்சி வெறும் காட்சிக்காகவோ, பெருமைக்காகவோ அல்ல!

"சமுதாயத்தின் அடித்தளத்திலே கிடக்கிற மக்களுக்கும் மனம் குளிரத்தக்க வண்ணம் ஒவ்வொரு நாளும் அரசின் சார்பில் ஏதாவது செய்து கொண்டேயிருக்க வேண்டும். அப்படிச் செயல்படுகிற நாளெல்லாம் உள்ளத்தில் இன்பம் துள்ளும் நாளாகவே இருந்திருக் கின்றது. சில மாதங்களுக்குமுன் 'ஸ்டேட்ஸ்மேன்' நிருபரிடம் பேசியபோது,

வெளிநாடுகளைப் போல, அற்புத விஞ்ஞான முன்னேற்றங்கள் தமிழ்நாட்டுக்கு வரவேண்டு மென்று ஆசையிருந்தாலும் அதற்கு நீண்டகாலம் பிடிப்பதைப் பற்றிக்கூட எனக்குக் கவலை இல்லை. எங்கள் நோக்கமெல்லாம் இங்குள்ள சாதாரண மக்களை மகிழ்ச்சி யோடும் உற்சாகத் தோடும் வாழச் செய்யவேண்டுமென்பதுதான் என்று குறிப்பிட்டேன். - நிருபர் போன பிறகு நீண்ட நேரம் யோசித்தேன்.

என்ன செய்திருக்கிறோம் ஏழை எளியவர் களுக்கு?

எல்லாவற்றையும் செய்து முடித்துவிடவில்லை யென்றாலும், ஏதோ நம்மாலானதைச் செய்திருக் கிறோம். கொஞ்சம் கொஞ்சமாகச் செய்து வருகி றோம். அவர்களும் நம்பிக்கை கொண்டிருக் கிறார்கள்.

அவர்களைக் காணும்போதும், அவர்களு டைய உள்ளத்தை உணரும்போதும் உற்சாகம் பீரிடுகிறது. உளைச்சல் நீங்குகிறது. எண்ணங்கள் பூரிக்கின்றன. அவை எழுத்தாரமாவதற்குத்தான் நேரத்தையும் இடத்தையும் தேடியலைய வேண் டும். எப்படியோ முடிகிறது. அந்தப் பணியையும் நிறைவேற்றி வருகிறேன்.

பழைய தமிழகம், புதிய தமிழகம், - மக்கள் நிலை, அறிவு வளர்ச்சி, இலக்கிய இன்பம், அரசியல் அலைகள். அனைத்தையும் பற்றிய விளக்கங்களோடு ஒரு தொடர் கட்டுரை எழுத வேண்டும் என்பது என் நெடு நாளைய அவா! வெறும் கட்டுரையாக மட்டுமிருந்தால் சுவை குன்றுமோ என்ற பயத்தில் தொடர் கதைபோல் அந்தக் கட்டுரையை எழுத எண்ணுகிறேன். கதையென்றால் அதற்கு ஒரு இழையோடும் கதாபாத்திரம் வேண்டுமே! அதற்கு என்னையே நான் தேர்ந்தெடுத்துக் கொண்டேன்."

- இவரது உற்சாகம் எப்படி சுரந்தது பார்த்தீர்களா?

No comments:

Post a Comment