ஊழல் வழக்கில் ஆஜராக எடியூரப்பாவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 9, 2021

ஊழல் வழக்கில் ஆஜராக எடியூரப்பாவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு, ஆக.9  பெங்களூருவை சேர்ந்த வழக்குரைஞர் டி.ஜே.ஆப் ரகாம், முன்னாள் முதல் வர் எடியூரப்பா, அவரது மகனுக்கு எதிராக பெங் களூரு சிறப்பு நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தனது மனுவில் ‘’கடந்த 2020-ஆம் ஆண்டு கருநாடக முதல்வராக இருந்த எடியூரப்பா, அவ ரது மகன் விஜயேந்திரா, உறவினர்கள் விருப்பாசா மரடி, சசிதர் மரடி, சஞ்சய், அப்போதைய கூட்டு றவுத் துறை அமைச்சர் சோமசேகர் உள்ளிட்ட 8 பேரும் பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தின் வீட்டு வசதி திட்ட குடியி ருப்புகள் கட்டுவதில் ஊழல் செய்தனர்’’ என தெரிவித்திருந்தார். இந்த மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதைத்தொடர்ந்து கருநாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் பட்டது. இம் மனு நீதிபதி சுனில் தத் யாதவ் முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது டி.ஜே.ஆப்ரகாம் கூறும்போது, ‘’எடியூரப்பா தற்போது முதலமைச்சர் பதவியில் இல்லாததால் ஆளுநரின் ஒப்புதல் தேவையில்லை. எனவே நீதிமன்றம் அவரை விசாரிக்க வேண்டும்‘’ என கோரினார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ‘’எடியூ ரப்பா, விஜயேந்திரா உள் ளிட்ட 8 பேரும் 17-ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment