ஒன்றிய அரசின் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெறாத பிற்படுத்தப்பட்ட ஜாதிகளை அந்தப்பட்டியலில் சேர்க்க வேண்டும் அமைச்சர் சிவசங்கரிடம் விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 7, 2021

ஒன்றிய அரசின் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெறாத பிற்படுத்தப்பட்ட ஜாதிகளை அந்தப்பட்டியலில் சேர்க்க வேண்டும் அமைச்சர் சிவசங்கரிடம் விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள்

அரியலூர், ஜூலை 7 ஒன்றிய அரசின் இதர பிற்படுத்தப்பட் டோர் பட்டியலில் இடம் பெறாத பிற்படுத்தப்பட்ட ஜாதி களை அந்தப்பட்டியலில் சேர்க்க வேண்டும் என தமிழ்நாடு பிற் படுத்தப்பட் டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கரிடம் விடு தலை சிறுத்தைகள் கட்சி வேண்டு கோள் விடுத்துள்ளது.

தமிழ்நாடு அரசின் பிற்படுத் தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஜாதிகளில் சேர்வை , ஆயிர வைசியர் உள் ளிட்ட சில ஜாதிகள் ஒன்றிய அரசின் இதர பிற்படுத்தப்பட்டோர் ஜாதி களின் பட்டியலில் (ஓபிசி) இடம் பெறவில்லை . தற்போது மாநில அரசுகளுக்கு பிற்படுத்தப்பட் டோர் பட் டியலில் மாற்றம் செய்யும் அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப் பளித்து விட்டது. எனவே இவ் வாறு ஒன்றிய அரசின் பட்டிய லில் இடம்பெறாத ஜாதிகளைச் சேர்ந்த மாணவர்கள் பொதுப் பட்டியலைச் சேர்ந்தவர்களாகக் (ஜெனரல் கேட்டகிரி) கருதப் படுவதால் ஒன்றிய அரசு கல்வி நிறுவனங்களில் சேர்வது சிக் கலுக்கு உள்ளாகியிருக்கிறது.இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் சார்பில் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த மாணவர்களின் எதிர்காலத்தைக் காப்பாற்ற வேண்டும் என வேண்டு கோள் விடுத்து தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரிடம் விடுதலைச் சிறுத் தைகள் கட்சியின் சார்பில் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், விழுப்புரம் எம்.பிரவிக்குமார் ஆகியோர் கடிதம் ஒன்றை  அளித்தனர். இந்தப் பிரச்சினை குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

No comments:

Post a Comment