நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பாஜக திரைக் கலைஞர் சூர்யாவை மிரட்டுவதா? இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 7, 2021

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பாஜக திரைக் கலைஞர் சூர்யாவை மிரட்டுவதா? இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கண்டனம்

சென்னை, ஜூலை 7 நீட் தேர் வுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் திரைக்கலைஞர் சூர்யாவை மிரட்டுவதா? என பாஜக இளைஞர் அணிக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத் துவப் படிப்பில் சேருவதற்கு இந்தியர்கள் கட்டாயம் நீட் எனும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்ற ஒன்றிய அரசின் நடவ டிக்கையை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் துவக்கம் முதலே எதிர்த்து வருகிறது.

ஒன்றிய அரசின் நீட் தேர்வு சமூகத்தின் பெரும்பகுதி மாண வர்கள் மருத்துவக்கல்வி பெறு வதை வெளிப்படையாகவே தடுக் கிறது. மேலும், தமிழ் நாட்டில் உள்ள மருத்துவ கட்டமைப்பை மேம்படுத் துவதிலும் எதிர் மறையான விளைவுகளை ஏற் படுத் துகிறது. எனவே, மாண வர்களுக்கு விரோதமான, ஒருதலைப்பட்சமான நீட் தேர்வை தமிழ்நாட்டில் ரத்து செய்யவேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட சமூக அக்கறையுள்ள அமைப் புகளும் தனிநபர்களும் வலியுறுத்துகின்றனர்.

நியாயமான, ஜனநாயக முறையில் தங்களது கருத் துக்களை பதிவு செய்வதைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாத பாசிச பாரதிய ஜனதா கட்சியினுடைய தமிழ்நாடு இளைஞர் அணி திரைக் கலைஞர் சூர்யா அவர்களும், தமிழக அரசும் நீட் தேர்வு குறித்து குழப்பத்தை ஏற்படுத்துவதாக கூறி அவதூறாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

தமிழக மக்கள் அனைவ ரும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பி வரும் நிலையில் தமிழ்நாடு அரசு அமைத்துள்ள குழுவே தவறென்றும், தமிழ்நாடு அரசு உத்தரவிட்ட அரசாணைக்கு தடை விதித்து அதனை ரத்து செய்ய வேண்டுமென தமிழ்நாடு பா.ஜ.க பொதுச் செய லாளர் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இதன் மூலம் தமிழ் நாடு மக்க ளுக்கும் எதிர்கால மருத்துவர்களாக வரவிருக் கிற மாணவர்களுக்கும் மிகப்பெரிய துரோகத்தை பாஜக இழைத்திருக்கிறது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

No comments:

Post a Comment