தஞ்சை, கோவை, ஈரோடு, சிவகங்கை, திண்டுக்கல் மண்டலங்களில் மகளிர் பெரியாரியல் பயிற்சி வகுப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 24, 2021

தஞ்சை, கோவை, ஈரோடு, சிவகங்கை, திண்டுக்கல் மண்டலங்களில் மகளிர் பெரியாரியல் பயிற்சி வகுப்பு

தஞ்சை, ஜூலை 24 தமிழர் தலைவர் வழிகாட்டுதலுக்கு இணங்க மகளிர் பெரியாரியல் பயிற்சி வகுப்பு 19.7.2021, திங்கள்கிழமை அன்று சிறப்பாக தொடங்கியது.

தஞ்சை, கோவை, ஈரோடு, சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய 5 மண்டலங்களை உள்ளடக்கிய பிரிவு - 4இல் முதல் நாள் பயிற்சி வகுப்பு, பயிற்சி வகுப்பு மாணவி சிவகங்கை தென்றல் அவர்களின் தந்தை பெரியாரின் பொன்மொழியுடன் தொடங்கியது. வகுப்பு பற்றியும், வகுப்பாசிரியர் குறித்தும் தஞ்சை மண்டல மகளிரணி செயலாளர் .கலைச்செல்வி அறிமுகம் செய்து அறிமுகவுரை நிகழ்த்தினார். முதல் நாள் வகுப்பில் தந்தை பெரியாரின் வாழ்க்கை குறித்து அடிப்படையான ஒரு கேள்வி கேட்கப்பட்டது. ஏராளமான மகளிர் தோழர்கள் சரியான பதிலளித்தனர். வகுப்பின் விதிமுறைப்படி முதல் பரிசை கும்பகோணம் தில்லைக்கரசி பெற்றார். முதல் நாள் வகுப்பில் "தந்தை பெரியார் நடத்திய போராட்டங்கள்" என்ற தலைப்பில் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் மிக ஆழமாக, ஆண்டு வாரியாக தந்தை பெரியாரின் போராட்டத்தை, போராட்ட நோக்கத்தை போராட்ட வடிவத்தை எடுத்துரைத்து மகளிர் புரிந்து கொள்ளும் வண்ணம் வகுப்பு எடுத்தார். தலைப்பினை ஒட்டிய கேள்விகளை மகளிர் வகுப்பாசிரியரிடம் கேட்டு அய்யம் தீர்த்தனர். வகுப்பின் இறுதியில் கோவை பாக்யலட்சுமி நன்றியுரை கூறினார். பிரிவு 4 ஒருங்கிணைப்பாளர், மாநில மகளிர் பாசறை மாநில அமைப்பாளர் சே.மெ.மதிவதனி வகுப்பினை இணைப்புரை வழங்கி ஒருங்கிணைத்தார்.

20.07.2021 மகளிர் பெரியாரியல் பயிற்சி வகுப்பு

தஞ்சை, கோவை, ஈரோடு, சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய 5 மண்டலங்களை உள்ளடக் கிய பிரிவு - 4இல் இரண்டாம் நாள் (20.7.2020 பயிற்சி வகுப்பில் பங்கேற்ற மகளிர் தோழர் கோவை கல்பனா ராணி கூறிய பெரியார் பொன்மொழியுடன் தொடங்கியது. வகுப்பு குறித்தும், வகுப்பாசிரியர் பற்றியும் அறிமுகம் செய்து சிவகங்கை மண்டல மகளிரணி செயலாளர் சே.மணிமேகலை உரையாற்றினார். "தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகள் " என்ற தலைப்பில் திருவாரூர் மண்டல மகளிரணி செயலாளர் ஆசிரியர் கோ. செந்தமிழ் செல்வி தந்தை பெரியாரின் பகுத்தறிவு சிந்தனை, பகுத்தறிவாளர் மன்றத் துவக்க விழாவில் அவர் ஆற்றிய உரை, இன்றைய காலக்கட்டத்தில் மகளிர் எப்படி பகுத்தறிவுடன் செயல்பட வேண்டும் என்று வரலாற்று குறிப்புகளுடன் மகளிர் புரிந்துகொள்ளும் வண்ணம் வகுப்பெடுத்தார். முதல் நாள் வகுப்பில் எடுத்த பாடத்தின் கீழ் இருந்து ஒரு கேள்வி கேட்கப்பட்டது. தஞ்சை ரம்யா முதல் நபராக சரியான விடை அனுப்பி முதல் பரிசு பெற்றார். வகுப்பினை மாநில மகளிர் பாசறை அமைப்பாளர் சே.மெ.மதிவதனி இணைப்புரை வழங்கி ஒருங்கிணைத்தார். நிகழ்வின் இறுதியில் பயிற்சி வகுப்பு மாணவி சிவகங்கை சரண்யா தந்தை பெரியார் பற்றி தானே எழுதிய பாடலை பாடி, தன் தனித்திறனை சிறப்பாக வெளிப்படுத்தினார். இறுதியில் பயிற்சி வகுப்பு மாணவி நீலாலோஷினி நன்றியுரை கூறினார்.

21.07.2021 மகளிர் பெரியாரியல் பயிற்சி வகுப்பு

தஞ்சை, கோவை, ஈரோடு, சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய 5 மண்டலங்களை உள்ளடக்கிய பிரிவு - 4இல் மூன்றாம் நாள் (21.07.2020 பயிற்சி வகுப்பு மிகுந்த உற்சாகத்துடன் தொடங்கியது. பெரியாரின் பொன்மொழிகள் கூறி பயிற்சி மாணவி கோவை இனியா தொடங்கி வைத்தார். "தந்தை பெரியாரும் சமூகநீதியும்" என்ற தலைப்பு குறித்தும், வகுப்பாசிரியர் கழகத்தின் வெளியுறவுத்துறை செயலாளர் கோ. கருணாநிதி பற்றியும் கோவை மண்டல மகளிரணி செயலாளர் பகலைச்செல்வி அறிமுகவுரை நிகழ்த்தினார். மனுதர்மத்தின் பேரால் இழைக்கப்பட்ட அநீதி, ஜோதிராவ் பூலேவின் சமூகநீதி சிந்தனை தொடங்கி நீதிக்கட்சியின் சமூகநீதி சாதனை பெரியாரின் வகுப்புவாரி பிரதிநிதித்துவ முழக்கம் அதற்காக அவர் ஈடுபட்ட போரட்டக்களம், திராவிடர் கழகத்தால் திருத்தப்பட்ட சட்டங்கள், சமூகநீதி தளத்தில் கழகத் தலைவரின் பணி என்று அனைத்தையும் மிக எளிமையாக அனைவரும் புரியும்படி வகுப்பாசிரியர் கோ.கருணாநிதி அவர்கள் வகுப்பெடுத்தார். முதல் நாள் வகுப்பில் எடுக்கப்பட்ட பாடத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு கோவை இனியா சரியான பதில் பதிவு செய்து முதல் பரிசு பெற்றார். நிகழ்வின் இறுதியில் பயிற்சி மாணவி தஞ்சை ரம்யா கவிதை வாசித்து தன் தனித் திறமையை வெளிக்கொணர்ந்தார்.வகுப்பைமாநில மகளிர் பாசறை அமைப்பாளர் சே.மெ.மதிவதனி, தஞ்சை மண்டல மாணவர் கழக பொறுப்பாளர் பொ..பகுத்தறிவு ஆகியோர் இணைப்புரை வழங்கி ஒருங்கிணைத்தனர்.

22.7.2021 மகளிர் பெரியாரியல் பயிற்சி வகுப்பு

தஞ்சை, கோவை, ஈரோடு, சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய 5 மண்டலங்களை உள்ளடக்கிய பிரிவு - 4இல் நான்காம் நாள் (22.07.2021) பயிற்சி வகுப்பு மிகுந்த ஆர்வத்துடன் தொடங்கியது.வகுப்பினை பயிற்சி மாணவி கவுசல்யா பெரியாரின் பொன்மொழிகள் கூறி தொடங்கி வைத்தார்.வகுப்பு ஆசிரியர் பற்றி அறிமுகம் செய்தும், இணைப்புரை வழங்கியும் தஞ்சை மாணவர் கழக பொறுப்பாளர் பொ.. பகுத்தறிவு வகுப்பை நெறிப்படுத்தினார். “தந்தை பெரியாரின் அணுகுமுறைஎன்ற தலைப்பில் ஒவ்வொரு நிகழ்விலும் பெரியாரின் அணுகுமுறை எப்படிப்பட்டது, அவரின் சமூக,அரசியல் அணுகுமுறைகள் என்பன பற்றி மிக ஆழமாக அனைவருக்கும் மிக எளிதாய் புரியும் வகையில் முனைவர் மு.சு.கண்மணி வகுப்பெடுத்தார். மகளிர் தோழர்கள் தங்களின் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர். முந்தைய நாள் பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட கேள்விக்கு சரியான விடை அளித்து நீலகிரி, அருணா பரிசினைப் பெற்றார்.மாணவி சிறீதேவி தனது தனித்திறனை உற்சாகமாக வெளிப்படுத் தினார்.

வகுப்பின் இறுதியில் தஞ்சை தென்றல் நன்றியுரை கூறினார்.

No comments:

Post a Comment