ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 24, 2021

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி: ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் மூன்று உளவு மற்றும் புலனாய்வு அமைப்புகள் இருந்தும் தம் நாட்டுத் தலைவர்களையும், தம் அமைச்சரவையிலுள்ள அமைச்சர்களையும் உளவு பார்க்க அயல்நாட்டு உளவு நிறுவனங்களை பயன்படுத்துவது பற்றி தங்கள் கருத்து?

- திராவிட விஷ்ணு, வீராக்கன்

பதில்: நியாயமான கேள்விதான், பன்னாட்டு ரீதியில், மிகவும் அதி தொழில்நுட்பத்துடன் இங்கேயே மற்றவர்களுக்கு உளவு பார்ப்பது தெரியாமல் இருக்கவும் செய்யப்பட்ட ஏற்பாடுகளே இவை. இதுபனிப்பாறையின் முனை’ ‘ஜிவீஜீ ஷீயீ tலீமீ மிநீமீதீமீக்ஷீரீதான். பாறை இனிமேல் வந்தால் மேலும் பல அதிர்ச்சியூட்டக்கூடிய தகவல்களுக்கான வாய்ப்புகளும் வரக்கூடும்!

இது இந்தியாவின் (மற்றொரு) வாட்டர் கேட் - முன்பு துள்ளிக்குதித்த சு.சுவாமிகள் இப்போது இதனை எப்படி கையாளுகிறார்கள் என்பதையும் நாடு நன்கு - உற்று - கவனித்துக் கொண்டுதான் உள்ளது!

கேள்வி: மதுரையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் வருவதையொட்டி தடல்புடலான ஏற்பாடுகளை செய்யுங்கள் என்று ஒரு மாநகராட்சி அதிகாரி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது எதைக் காட்டுகிறது?

- அயன்ஸ்டின் விஜய்; சோழங்குறிச்சி

பதில்: ஆர்.எஸ்.எஸ்., பா... அதிகாரிகளின் ஊடுருவல் தமிழ்நாடு அளவில் நிரம்ப உள்ளது என்பதைக் காட்டுகிறது.

காவல்துறையிலும் இத்தகைய விபீடண ஆழ்வார் திருக்கூட்டங்கள் உண்டு. கண்காணிக்கப்பட வேண்டிய வர்கள் ஏராளம்.

கேள்வி: ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளில் நம்பிக்கை யுள்ளவர்கள் காங்கிரசில் இருந்து வெளியேறுங்கள் என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளாரே - இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய செய்தி என்ன?

 .மணிமேகலை, வீராபுரம்

பதில்: 1. ராகுல்காந்திக்கு காங்கிரஸ் அமைப்புக்குள் ஏற்பட்டுள்ள நிலைமை பற்றிய மனவேதனை

.

2) ‘பெரிய தலைகள்பல - விலாங்குகளாகபாம்புக்கு வால்; மீனுக்குத் தலைகாட்டும் நிலையில் - காங்கிரஸ் கட்சி உள்ளது என்பதை.

3) வயலில் பயிர்களை விட களைகள் அதிகம் முளைத்துவிட்டது; களையெடுக்காவிட்டால் ஏனைய பயிர்களும் வீணாகிவிடும் என்பது உண்மை!

கேள்வி: இந்தியாவிலேயே பெண்களுக்கு முதன் முதலாக வாக்குரிமை வழங்கியதும், நவீன பெண்ணியத்தின் முன்னோடி மாநிலமாகவும் விளங்கும் தமிழ்நாட்டின் சட்டப்பேரவைக்கு மிகக்குறைந்த அளவு பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பற்றி தங்கள் கருத்து?

- கருப்பையா, மதுரை

பதில்: மகளிர் அமைப்புகளும், அரசியல் கட்சிகளில் மகளிர் செல்வாக்கும் இன்னும் ஓங்கவில்லை என்பதே மூல காரணம்.

நாடாளுமன்றத்தில் மூன்றில் ஒருபங்கு மகளிருக்கு ஒதுக்கீடு செய்யும் சட்டம் 7, 8 பிரதமர்களை பல கட்சிகளிலிருந்து - பார்த்தும் நிறைவேறாது ஊறுகாய் ஜாடியில் ஊறி ஊறி விறைத்துக் கிடப்பதால் இது.

உரிமை கேட்கும் இடத்தில் இருந்தாலும் (சரி பகுதி பெண் வாக்காளர்கள் இருந்தும்) சலுகை கூட சரியாகக் கிட்டாததே வேதனைக்கும் வெட்கத்திற்கும் உரியது அல்லவா?

கேள்வி: பள்ளிப் பாடங்களில் இடம் பெறும் கருத்துகளுக்கு இந்தியாவின் மிக முக்கிய வரலாற்று ஆய்வு நிறுவனமான இந்திய வரலாற்று காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளதே?

-தமிழ் மைந்தன், சைதாப்பேட்டை

பதில்: ஆர்.எஸ்.எஸ். கருத்துப்படி பாடத்திட்டங்கள் திணிக்கப்படுகின்றன! மக்கள் எதிர்ப்பு வலுக்க - பிரச்சாரம் அறப்போராட்டங்கள் பெருகவேண்டும். ஆய்வாளர்கள் கருத்து மட்டும்தான் கூறமுடியும்!

கேள்வி: ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் தனது விவரக் குறிப்பில் கொங்குநாடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது பற்றி இதுகிளரிக்கல் மிஸ்டேக்என்கிறாரே?

- கருணாமூர்த்தி, விருத்தாச்சலம்

பதில்: பரவாயில்லை போட்டதுமிஸ்டேக்தவறு என்றாவது கூறினாரே! அது பா...வில் தீர்மானம் போட்டவர்களின் கண்ணைத் திறக்க, வாயைக் கட்டுவதற்குப் பயன்பட்டால் சரி!

கேள்வி: சுதந்திரம் அடைந்து 75 - ஆண்டுகள் ஆன நிலையில் தேசத் துரோகச் சட்டம் இப்போதும் தேவையா? என ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் வினா எழுப்பி இருப்பது நியாயம்தானே!

             - .சண்முகம், மணிமங்கலம்.

பதில்: இது பற்றி உச்சநீதிமன்றம் எழுப்புகிற கேள்வி நியாயமானதே. காலனி ஆட்சியின் காலாவதியாக வேண்டிய சட்டங்களில் இது முதன்மையானது என்பது இப்போதாவது புரிந்தால் சரி!

மக்கள் உணர்வலைகள் பெருக வேண்டும்! பல சட்டங்கள் இப்படி உள்ளன!

கேள்வி: ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் வேதங்களை உள்ளடக்கிய நவீன கல்வியை கற்பிக்கும் சுயாட்சி பெற்ற கல்வி நிறுவனங்களை அமைக்கும் திட்டம் உள்ளது என்று கூறியுள்ளாரே? 

 - செல்வம் வைரம், பஹ்ரைன்

பதில்: ஆர்.எஸ்.எஸ். பள்ளிக்கூடங்களை உருவாக்க முனையும் முயற்சிக்கான முக்காடு இது! எப்படி தேன் தடவுகிறார்கள் பாருங்கள். சுயாட்சிக்கு; இதுதான் முக்கிய தலைப்பா? மகா வெட்கக்கேடு!

பச்சை ஆர்.எஸ்.எஸ். ராஜ்யம் - என்று மடியும் இந்த அடிமையின் மோகம்? என்ற கேள்வி எதிரொலிக்கிறது.

கேள்வி: கரோனா தொற்றுப் பரவலுக்கு வழி வகுத்துவிடும் என்பதால்நீட்  உள்ளிட்ட தேர்வுகளை நடத்தும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்கள் வலியுறுத்தி இருப்பதை பிரதமர் பரிசீலிப்பாரா?

            - இர. கார்த்தி, மேடவாக்கம்.

பதில்: நமக்கு நம்பிக்கை இல்லை!

கேள்வி: பேனர் வைக்கும் கலாச்சாரத்தை திமுக ஒருபோதும் அனுமதிக்காது என்றும், முதலமைச்சர் மு..ஸ்டாலின்  அவர்களின் ஆணையை யார் மீறினாலும் அவர்கள் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்கும் என்றும் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி அவர்கள் ஓர் அறிக்கையில் தெரிவித்திருப்பது வரவேற்க வேண்டிய விடயம்தானே!

- . சுசிலா,  திருவான்மியூர்.

பதில்: நிச்சயமாக. முதல் அமைச்சராக மு..ஸ்டாலின் அவர்கள் வருவதற்கு முன்பு, கட்சித் தலைவராக வந்தவுடன் காலில் விழும் கலாச்சாரத்தை நீக்கினார் என்பதும், முதல்வரானதும் விழாக்கள் எதையும் அனுமதிக்காததோடு, பணியில் மூழ்கிவிட்ட நிலையில், பூச்செண்டு, பூமாலைபோட்டு சால்வை வழங்காமல் - புத்தகங்கள் தாருங்கள் என்று கூறி, அவைகளை கன்னிமாரா நூலகத்திற்கு அன்பளிப்பாக தந்துள்ளது போற்றத்தக்க வரலாற்றுப் பெருமைக்குரிய நிகழ்வுகள் அவை! நிச்சயம் வரவேற்கப்பட வேண்டியவைகளே!

No comments:

Post a Comment