டோக்கியோவில் நடைபெறுகின்ற ஒலிம்பிக் போட்டியிலும் ஹிந்துத்துவாத் திணிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 24, 2021

டோக்கியோவில் நடைபெறுகின்ற ஒலிம்பிக் போட்டியிலும் ஹிந்துத்துவாத் திணிப்பு

 வீரர்களின் உடையில் ஆர்.எஸ்.எஸ். அடையாளமா?

டோக்கியோ, ஜூலை 24- பாஜக, ஆர்எஸ்எஸ்சின்  ஹிந் துத்துவா திணிப்புப் போக்கு ஒலிம்பிக் போட்டியிலும் வெளிப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் இந்தியா சார்பில் வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. அப்போது, ஆர்.எஸ்எஸ். சீருடையில் உள்ள காக்கி  நிறத்தைக் கொண்டுள்ள உடைகளை உடுத்திச் செல்ல வைத்துள்ளனர். இந்திய ஒன்றிய அரசின் விளையாட்டுத்துறை அமைச்சர்கள் அனுராக் தாக்குர், நிசித் பிரமானிக் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை திட்டமிட்டு செய்துள்ளனர்.

ஒலிம்பிக் போட்டி தொடக்கவிழாவில் அறிவிப் பாளர் கூறுகையில், இந்திய வீரர்களின் அணிவகுப்பில்இந்தியமுறையில்  உடை உடுத்தி, மூவண்ணக் கொடி யுடன் அணிவகுப்பில் பங்கேற்றனர் என்று குறிப்பிட்டார்.

ஒன்றிய விளையாட்டுத்துறை இணை அமைச்சர் நிசித் பிரமானிக் கூறுகையில், ‘‘அடுத்த 16 நாள்களிலும் நடைபெறும் விளையாட்டுப்போட்டிகளை இந்திய மக்கள் முன்னதாகவே விழித்திருந்து காண்பதுடன் இந்திய வீரர்களை உற்சாகப்படுத்த வேண்டும். வீரர் களுக்கு அழுத்தத்தைக் கொடுக்காமல், ஆதரவை அளித்து உற்சாகப்படுத்த வேண்டும். அவர்களால் முடிந்ததை அவர்கள் கண்டிப்பாக செய்வார்கள் என்று உறுதியுடன் நம்புகிறேன்'' என்றார். ஆனால், அணிவகுப் பின்போது விளையாட்டு வீரர்களின் உடை தேர்வில் பெண்கள் அணிந்துள்ள பேண்ட், குர்தாக்கள் பலரையும்  அதிர்ச்சி அடையச் செய்துள்ளன.

லண்டன் செயின்ட் மார்டின் கல்லூரியில் பேஷன் டிசைனிங் பட்டப்படிப்பு பெற்றவரும், டில்லியிலுள்ள பேஷன் டெக்னாலஜிக்கான நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆளுமைக்குழு மேனாள் உறுப்பினருமான நமிதா சவுத்ரி கூறுகையில், ஒலிம்பிக்கில் இதுபோன்ற உடையை தேர்வு செய்வதை யாரும் கற்பனை செய்து கூட பார்க்கமுடியாது என்றார். ‘‘அந்த உடை பளிச் சென்று இல்லாமல் மிகவும் மோசமாக இருந்ததுடன், நாட்டுக்கே தலைகுனிவானதாகவும் உள்ளது. இந்தியா  பன்முகத்தன்மை கொண்ட நாடு. செழுமையுடன் துடிப் பாக  பல வண்ணங்களுடன், பல வடிவங்களுடன் உள் ளது. ஒலிம்பிக்கில் அணியப்பட்ட உடை நம்முடைய நாட்டின்  தன்மையை வெளிப்படுத்துவதாக இல்லை. அந்த உடை ஆர்.எஸ்.எஸ். வடிவத்தைக் கொண்டுள் ளது. நம் நாட்டு பெண்களின் உடையாக சேலையை அணியச்செய்திருக்கலாம்'' என்றார்.

நமிதாவைப்போன்றே டோக்கியோ ஒலிம்பிக் தொடக்கவிழா குறித்து, 1992 ஆம் ஆண்டில் பார்சி லோனாவில் தொடங்கி ரியோடிஜெனிரோவில் நடை பெற்ற ஒலிம்பிக் போட்டி உள்பட ஆறு ஒலிம்பிக் போட் டிகள் குறித்த தகவல்களை அளித்து வந்துள்ளவரும்,   புகழ்பெற்ற ஊடகவியலாளருமாகிய பிரப்ஜோத் சிங் கூறுகையில், டோக்கியாவில் நடைபெற்ற ஒலிம்பிக்  தொடக்க விழாவில் இந்திய வீரர்களின் அணிவகுப்பு காண சகிக்கவில்லை. ஏனென்றால், சேலைக்கு பதிலாக பெண்கள் மேற்கத்திய ஆடையை அணிந்திருந்தனர். அது இந்தியர்களின் மரபுகளையோ, நெறிமுறைக ளையோ பிரதிபலிப்பதாக இல்லை என்றார்.

No comments:

Post a Comment