அதிகாலை நடைப்பயிற்சி சென்ற மாவட்ட நீதிபதி மீது ஆட்டோ ஏற்றி கொலை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 30, 2021

அதிகாலை நடைப்பயிற்சி சென்ற மாவட்ட நீதிபதி மீது ஆட்டோ ஏற்றி கொலை

தன்பாத், ஜூலை 30- ஜார்க்கண்ட் மாநிலத்தில் அதிகாலையில் நடைப்பயிற்சி சென்ற மாவட்ட நீதிபதி மீது ஆட்டோ ஏற்றி கொலை செய்தது தெரியவந்துள் ளது. இது தொடர்பான காட்சிப் பதிவு வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சம்பவத்துக்கு உச்ச நீதிமன்றமும், ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றமும் கடும் கண்டனம் தெரி வித்து உள்ளன.

ஜார்க்கண்ட் மாநிலம் தன் பாத் மாவட்ட மற்றும் கூடுதல் நீதிபதியாக இருந் தவர் உத்தம் ஆனந்த். இவர் 28.7.2021 அன்று அதிகாலை 5 மணி அளவில் நடைப்பயிற்சி சென்றுள்ளார். வீட்டில் இருந்து அரை கி. மீட்டர் தொலைவில் சாலையில் மெதுவாக ஓடிக் கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயம் அடைந்து சாலையில் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தார்.

அந்த வழியாக சென்ற ஒரு வர், நீதிபதியை மீட்டு மருத்துவ மனையில் சேர்த்துள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி நீதிபதி உத்தம் ஆனந்த் பரிதாப மாக உயிரிழந்தார். வாகனம் மோதி விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.

இந்நிலையில், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் அடங்கிய காட்சிப் பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வெளி யானது. அதில், நீதிபதி உத்தம் ஆனந்த் நடைப் பயிற்சி செல்வதும், ஒரு திருப்பத்தில் இருந்து ஆட்டோ ஒன்று வேக மாக திரும்பி அவர் மீது மோதி விட்டு நிற்காமல் செல்வதும் அந்த காட்சியில் பதிவாகி உள்ளது. வேறு எந்த வாகனங்களும் இல்லாமல் வெறிச் சோடிய சாலையின் ஓரமாக சென்று கொண்டிருந்த நீதிபதி மீது வேண்டுமென்றே ஆட்டோ மோதுவது காட்சிப் பதிவில் தெளிவாக தெரிகிறது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக விசாரணை நடத்தி, ஆட்டோ ஓட்டுநர் லக்கன் குமார் வர்மா, அவரது கூட்டாளி ராகுல் வர்மா ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதுகுறித்து காவல்துறை கண்காணிப்பாளர் அமோல் வினு கந்த் ஹாம்கர் நேற்று (29.7.2021) கூறியதாவது:

நீதிபதி மீது வேண்டுமென்றே ஆட் டோவை ஏற்றி கொலை செய்தது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவருகிறது. இந்த சம்பவம் நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான் ஆட்டோவை திருடிச் சென்று கொலைக்கு பயன் படுத்தி உள்ளனர். அந்த ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இருவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment