வேகமாக அதிகரிக்கும் இணைய பொழுதுபோக்கு (ஓ.டி.டி.) சந்தை மதிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 21, 2021

வேகமாக அதிகரிக்கும் இணைய பொழுதுபோக்கு (ஓ.டி.டி.) சந்தை மதிப்பு

புதுடில்லி, ஜூலை 21- இந் திய இணைய பொழுது போக்கு (.டி.டி.) சந்தை யின் மதிப்பு, 10 ஆண்டு களில் 1.13 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டில் இந்த சந்தையின் மதிப்பு, 11 ஆயிரத்து, 250 கோடி ரூபாயாக இருக்கும் என் றும், 2030இல், 93,750 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது. மிகப்பெரிய வளர்ச்சிசிறப்பான இணைய வசதி, டிஜிட் டல் இணைப்பு, திறன் பேசிகள்கள் ஆகியவற் றின் காரணமாக, இந்த வளர்ச்சி எட்டப்படும் என, ‘ஆர்.பி.எஸ்.., அட் வைசர்ஸ்நிறுவன அறிக் கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது: .டி.டி., சந்தை, இந்தியாவில் மிகப் பெரிய வளர்ச்சியை எட்டும். இந்த வளர்ச்சிக்கான அடுத்த அலை, இரண் டாம், மூன்றாம், நான் காம் நிலை நகரங்களிலி ருந்து வரும். நெட்பிளிக்ஸ்,  அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஆகிய பெரிய நிறுவனங்கள் மட்டுமின்றி; உள்ளூர் மற்றும் பிராந்திய .டி.டி., நிறுவனங்களும், அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களை பெற்று வருகின்றன. 46.27 கோடிவரும் 2025ல் .டி.டி., தளத்தை பயன் படுத்துவோர் எண் ணிக்கை 46.27 கோடியாக அதிகரிக்கும்.

இந்திய நுகர்வோர், கடந்த சில ஆண்டுகளில் மிகவும் அதிகமாக காணொலி பார்க்கும் பழக்கத்துக்கு வந்துள்ள னர். அதிலும் குறைந்த கால அளவிலான காணொ லிகளை, திறன்பேசிகளில் பார்ப்பது அதிகரித்து வருகிறது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment