கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 16, 2021

கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு

திருவனந்தபுரம், ஜூலை 16 கேரளாவில் புதிதாக 5 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட நிலை யில் மொத்த எண்ணிக்கை 28 ஆக உயர்ந்து உள்ளது.

கேரளாவில் சமீப நாள்களாக ஜிகா வைரஸ் பாதிப்பு பரவி வருகிறது.  கொசுக்களின் வழியே பர வக் கூடிய இந்த தொற் றுக்கு கேரளா அதிக இலக் காகி இருக்கிறது.  இது பற்றி கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறும்போது, கேரளா வில் மேலும் 5 பேருக்கு புதிதாக ஜிகா வைரஸ் தொற்று பரவியுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. புதி தாக பாதிக்கப்பட்ட 5 பேரில், 2 பேர் அனயரா பகுதியை சேர்ந்தவர்கள். குன்னுகுஷி, பட்டோம் மற்றும் கிழக்கு கோட்டை பகுதிகளில் தலா ஒருவ ருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது.

தற்போது சிகிச்சை யில் 8 பேர் மட்டுமே உள் ளனர். அதில் 3 பேர் கர்ப் பிணிகள். இந்த ஜிகா வைரஸ் தொற்று பாதிப் பில் முதல் நோயாளியும், அடுத்த 13 சுகாதார ஊழி யர்களும் அனயாராவில் உள்ள ஒரு தனியார் மருத் துவமனையை சேர்ந்தவர் கள்.

அனயாராவின் 3 கி.மீ. சுற்றளவு பகுதியில் அதிக அளவில் ஜிகா வைரஸ் அடையாளம் காணப்பட் டுள்ளது. இதனால் மற்ற இடங்களில் கொசுக்கள் பரவாமல் தடுக்க இப்பகு தியில் உள்ள கொசுக்களை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்து உள்ளார்.

இந்த ஜிகா வைரஸ் தொற்று குறித்து மக்கள் மனதில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றோம். ஜிகா வைரசுக்கு எதிராக அரசு விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் திருவனந்தபுரத்தின் மற்ற பகுதிகளிலும் தடுப்பு நட வடிக்கைகள் தீவிரப்படுத் தப்பட்டு உள்ளது என் றும் அவர் கூறியுள்ளார்.

வீடுகள் மற்றும் நிறு வனங்களுக்கு அருகி லேயே கொசுக்களின் இனப்பெருக்கம் நடை பெற்று பரவும் வகையில் இல்லாமல் சுத்தமாக வைத்திருப்பது குறித்தும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment