மேகதாதுவில் அணை கட்ட முயற்சிப்பதா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 16, 2021

மேகதாதுவில் அணை கட்ட முயற்சிப்பதா?

கருநாடக அரசைக் கண்டித்து விவசாயிகள் பட்டினிப் போராட்டம்

தஞ்சாவூர், ஜூலை 16- மேகதாது வில் அணைக் கட்டும் கருநாடக அரசின் முயற்சியைக் கண் டித்து தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் அருகே தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தி னர் நேற்று (15.7.2021) ஒருநாள் அடையாள பட்டினிப் போராட்டம் நடத்தினர்.

இப்போராட்டத்துக்கு சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமை வகித்தார். அப்போது அவர் கூறியது:

மேகதாதுவில் அணை கட்டினால், தமிழ்நாட்டில் 5 கோடி மக்கள் பாதிக்கப்படு வார்கள். 25 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாலைவன மாகும். தமிழ்நாடுமக்கள் அக திகளாக வெளியேறும் நிலை உருவாகும். எனவே, அணை கட்டமுயற்சிக்கும் கருநாடக அரசின் முடிவை, உடனடியாக குடியரசுத்தலைவர் தலை யிட்டு நிறுத்த வேண்டும்.

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நிரந்தர தலை வரை நியமிக்க வேண்டும், தமிழ் நாடு அரசு இனிமேல் பிரதமர் மோடியையும், நீர்வளத் துறை அமைச்சரையும் சந்திப்பதால் எந்த பயனும் இல்லை. எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக தனது செயல்பாட்டை மாற்றி, குடியரசுத் தலைவர் மூலமாக அரசியல் ரீதியான அழுத் தத்தை பிரதமருக்கு கொடுக்க வேண்டும்.

குறுவை பயிரைக் காப் பாற்ற, சம்பா சாகுபடியைத் தொடங்க உரியதண்ணீரைப் பெற்றுத் தர வேண்டும். அணை களின் நீர் நிர்வாகத்தைக் காவிரி மேலாண்மை ஆணை யம் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். தன்னாட்சி அதிகாரத்துடன் ஆணையம் செயல்பட வேண் டும் என்றார்.

இப்போராட்டத்தில் தமிழ்நாடும்முழுவதிலும் இருந்து பல்வேறு விவசாய சங்கங்கள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment