ஏட்டுத் திக்குகளிலிருந்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 21, 2021

ஏட்டுத் திக்குகளிலிருந்து

டெக்கான் கிரானிகல், சென்னை:

·  வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாய அமைப்புகள் நாடாளுமன்றம் முன்பாக உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திட முடிவு செய்துள்ளன.

· 2030-க்குள் தமிழ் நாட்டின் பொருளாதாரத்தை ஒரு லட்சம் கோடி டாலருக்கு (ரூ.75 லட்சம் கோடி) உயர்த்திட அரசு முனைப்புடன் செயல்படுகிறது என முதலமைச்சர் மு..ஸ்டாலின் கூறியுள்ளார்.

தி டெலிகிராப்:

· மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பெகாசஸ் "ஒட்டு கேட்பது" பற்றி விவாதிக்கப்படும் வரை, நடந்துகொண்டிருக்கும் பருவமழை கூட்டத்தில் நாடாளுமன்ற நடவடிக்கைகளை நடைபெற கட்சி அனுமதிக்காது என்று திரிணாமுல் காங்கிரஸ்

அறிவித்துள்ளது.

· இதரப்பிற்படுத்தப்பட்ட பிரிவினர் பட்டியல்களை உருவாக்கிட மாநிலங்களுக்கு உரிமை இல்லை என உச்சநீதிமன்ற மே மாதத்தில் தீர்ப்பளித்தது. மீண்டும் மா நிலங்களுக்கு அதிகாரம் வழங்கிட உரிய சட்டத்திருத்தம் கொண்டு வரும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

டைம்ஸ் ஆப் இந்தியா:

· கூட்டுறவு சங்கங்களை திறம்பட நிர்வகிப்பதற்கான ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட 97 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் பகுதி மிஙீஙி அய் உச்சநீதிமன்றம் தடை செய்துள்ளது. 7ஆவது அட்டவணையின் மாநிலப் பட்டியலில் 'கூட்டுறவு சங்கங்கள்' உள்ளன.

- குடந்தை கருணா

No comments:

Post a Comment