சிறுபான்மையினர் நலன் காக்க கலைஞர் வழியில் பாடுபடும் மு.க.ஸ்டாலின் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 21, 2021

சிறுபான்மையினர் நலன் காக்க கலைஞர் வழியில் பாடுபடும் மு.க.ஸ்டாலின்

 இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பாராட்டு

சென்னை, ஜூலை 21  இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் அபூபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உலகம் முழுக்க இஸ்லாமியர்கள் கொண்டாடும் ஒப்பற்ற திருநாள் பக்ரீத் திருநாள். இந்த தியாகத்திருநாளில், அன்பை, அமைதியை, இறை நம்பிக்கையை, சமாதானத்தை அனைவருக்கும் போதிக்கும் வகையில் உறுதி ஏற்போம். அனைவருக்கும் பக்ரீத் திருநாள் வாழ்த்துக்கள்.

தமிழ்நாடு அரசின் அயராத முயற்சியால் கரோனா நோய் தொற்று வெகுவாக குறைந்துள்ளது. கடந்த முறை கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, தற்போதைய முதல்-அமைச்சர் மு..ஸ்டாலின் துணை முதல்-அமைச்சராக இருந்தார். அப்போது நான் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவராக இருந்தேன். சென்னை விமானநிலையத்திற்கு நேரடியாக வந்து 5,164 ஹஜ் பயணிகளை மு..ஸ்டாலின் வழியனுப்பி வைத்தார். வரும் ஆண்டில் ஹஜ் பயணம் மேற்கொள்ள இருக்கும் நமக்கு 5 ஆயிரத்திற்கும் அதிகமான ஹஜ் பயணிகளை தமிழ்நாட்டிலிருந்து அனுப்புவதற்கு முதலமைச்சர் மு.. ஸ்டாலின் உரிய அனுமதியை பெற்றுத்தருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. சிறுபான்மையினர் நலன் காப்பதில் கலைஞர் போலவே மு..ஸ்டாலினும் பாடுபடுகிறார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கரோனா தொற்று 40 கோடி பேரை தாக்கும் ஆபத்து உள்ளது அய்சிஎம்ஆர்  எச்சரிக்கை

புதுடில்லி,ஜூலை21- இந்தியாவில் மூன்றில் 2 பங்கு மக்களுக்கு எதிர்ப்பு சக்தி உண்டாகி உள்ளது. அதே நேரம், 40 கோடி பேர் கரோனாவால் தாக்கப்படும் அபாய நிலையில் இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் எச்சரித்துள்ளது. நாடு முழுவதும் கரோனா பாதிப்பு 3 கோடியை தாண்டி உள்ளது. பலி எண்ணிக்கை 4இலட்சத்தை கடந்துள்ளது.   இந்நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (அய்சிஎம்ஆர் ) சார்பில் 4ஆவது தேசிய கரோனா எதிர்ப்பு சக்தி ஆய்வு (செரோ) ஜூன் - ஜூலை மாதத்தில் எடுக்கப்பட்டது.

இது குறித்து, அய்சிஎம்ஆரின் மூத்த அதிகாரி கூறுகையில், ‘‘21 மாநிலங்களில் 70 மாவட்டங்களில் 28,975 பொதுமக்கள், 7,252 சுகாதார பணியாளர்களிடம் நடத்தப்பட்ட செரோ ஆய்வில், 6 வயதுக்கும் மேல் மூன்றில் இரண்டு பங்கு (67.6%) மக்களுக்கு கரோனா நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகி இருப்பது தெரிய வந்துள்ளது. மற்றவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இல்லை. இதனால், 40 கோடி பேரை கரோனா தாக்கும் அபாயம் உள்ளது. 85% சுகாதார பணியாளர்களுக்கு எதிர்ப்பு சக்தி ஏற்பட்டுள்ளது. 10ல் ஒரு சுகாதார பணியாளர் இன்னும் தடுப்பூசி போடவில்லை. சமூக, மத மற்றும் அரசியல் கூட்டங்கள் தவிர்க்கப்பட வேண்டும். முழுமையாக தடுப்பூசி போட்டால் மட்டுமே பயணம் செய்யுங்கள்,’’ என்றார்.

அமெரிக்காவின் கட்டுப்பாடு தளர்வு'

இந்தியாவில் கரோனா பாதிப்பு குறைந்து வருவதால் அந்நாட்டுக்கு பயணம் செய்வதை எளிதாக்க வேண்டும் என மக்கள் வைத்த கோரிக்கையை ஏற்று, ‘பயணத்துக்கு அனுமதி கிடையாதுஎன்ற பட்டியலில் இருந்த இந்தியாவை, ‘நிபந்தனைகளுடன் பயண அனுமதிஎன்ற கட்டத்துக்கு அமெரிக்க அரசு மாற்றியுள்ளது.

125 நாட்களுக்கு பின் பாதிப்பு 30,000'

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,093 பேர் தொற்றால்  பாதித்துள்ளனர். இது, கடந்த 125 நாட்களுக்கு பின் பதிவான குறைந்த  எண்ணிக்கையாகும். நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 11 லட்சத்து 74  ஆயிரத்து 322 ஆக உள்ளது.

ஒரே நாளில் புதிதாக 374 பேர் பலியாகி உள்ளனர். இது, கடந்த 111 நாட்களுக்கு பின்  பதிவான குறைந்த பலி எண்ணிக்கை. மொத்த பலி எண்ணிக்கை 4 லட்சத்து 14 ஆயிரத்து  482 ஆக உயர்ந்துள்ளது.

2.11 கோடி டோஸ் கையிருப்பு''

நாடு முழுவதும் 42 கோடியே 15 லட்சத்து 43 ஆயிரத்து 730 டோஸ் தடுப்பூசி விநியோகம் செய்யப்பட்டதில், 40 கோடியே 3 லட்சத்து 50 ஆயிரத்து 489 டோஸ் தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. 2 கோடியே 11 லட்சத்து 93 ஆயிரத்து 241 டோஸ் மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளின் கையிருப்பில் உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment