சீனாவில் கரோனா தொற்று அதிகரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 21, 2021

சீனாவில் கரோனா தொற்று அதிகரிப்பு

பீஜிங், ஜூலை 21- உலகில் முதன் முதலாக சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் கரோனா தொற்று கண்டறி யப் பட்டது. தற்போது அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கரோனாவுடன் போராடிக் கொண்டிருக்க, சீனா கரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது.

இந்த நிலையில் சீனாவில் மீண்டும் கரோனா தலைக் காட்டத் துவங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் புதிதாக 65 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 19.7.2021 அன்று 31 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது. கடந்த ஜனவரி 30 ஆம் தேதி 92 பேருக்கு தொற்று உறுதியாகியிருந்த நிலையில், அதன் பிறகு தற்போது பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

மேலும் அறிகுறி இல்லாத தொற்றுப் பாதிப்புகளை உறுதி செய்யப்பட்ட பாதிப்பாக சீன சுகாதாரத்துறை அறி விப்பதில்லை. அந்த வகையில் 19 பேருக்கு அறிகுறி இல்லாத கரோனா தொற்று உறுதியாகியிருப்பதாகவும் கூறப்படு கிறது.  இந்த புதிய பாதிப்புகளின் மூலம் சீனாவில் இதுவரை கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 92,342 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கரோனாவால் அங்கு இதுவரை 4,636  பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய பயணிகள் விமானங்களுக்கு கனடாவில் மீண்டும் தடை

ஒட்டவா,  ஜூலை 21- இந்தியாவில் டெல்டா வகை கரோனா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டதும், இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் விமானங்களுக்கு கனடா அரசு தடை விதித்தது. அதாவது, கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி இந்த தடை விதிக்கப்பட்டது. ஜூலை 21 ஆம் தேதியுடன் இந்த தடை முடிவுக்கு வர இருந்த நிலையில், மேலும் ஒரு மாதம் நீட்டித்து கனடா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி, வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை இந்திய பயணிகள் விமானங்களுக்கான கனடாவின் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து விளக்கம் அளித்துள்ள கனடா போக்குவரத்து துறை அமைச்சர், “மருத்துவ நிபு ணர்களின் பரிந்துரையின் படியே இந்த முடிவு எடுக்கப்பட் டதாகவும், இந்தியாவில் நிலைமை இன்னும் மிக மோசமா கவே உள்ளது. டெல்டா வகை கரோனா பரவலை தடுக்கும் நோக்கில் இந்த தடை நீட்டிக்கப்பட்டு உள்ளதுஎன்றார்.

No comments:

Post a Comment