மருத்துவப் படிப்பில் 69 சதவிகித இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படுமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 27, 2021

மருத்துவப் படிப்பில் 69 சதவிகித இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படுமா?

ஒன்றிய அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஜூலை 27- தமிழ் நாட்டில் மருத்துவப் படிப்பில் 69 சதவிகித இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படுமா என்பது குறித்து ஒன்றிய அரசின் நிலைபாட்டை தெரிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களின் இதர பிற்படுத் தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கடந்த ஆண்டு திமுக மற்றும் அதிமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த இடஒதுக்கீடு அந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு இந்த ஆண்டிற்கு ஒதுக்கீடு வழங்குவது என்பது சாத்திய மில்லாதது என்று தெரிவித் தனர். அடுத்த கல்வியாண்டில் அதாவது இந்த கல்வியாண் டில் எவ்வளவு சதவிகிதம் அமல்படுத்த முடியும் என்று அறிவித்து விட்டு, இந்த ஆண்டு சேர்க்கையில் அனு மதிக்க வேண்டுமென உயர் நீதிமனறம் தெரிவித்து இருந் தது. இதுதொடர்பாக ஒன்றிய அரசு எந்தவித முடிவும் எடுக்கவில்லை என்று திமுக சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குதொடரப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன் நேற்று (26.7.2021) விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாட் டில் மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 69 சதவிகித இட ஒதுக்கீடு எவ்வாறு அமல் படுத்தப்படும் என உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பி யுள்ளது. நடப்பு கல்வியாண் டில் இட ஒதுக்கீடு எவ்வாறு அமல்படுத்தப்படும் என்று ஒன்றிய அரசு ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

No comments:

Post a Comment