69 விழுக்காடு இடஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 10, 2021

69 விழுக்காடு இடஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும்

அதிகாரிகளுக்கு தமிழ்நாடு முதல் அமைச்சர் மு..ஸ்டாலின் உத்தரவு

சென்னை, ஜூலை 10 69 விழுக்காடு இடஒதுக்கீட்டை பாதுகாக்க வேண் டும் என்று அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு..ஸ்டாலின் உத்தரவிட் டுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப் பட்டு இருப்பதாவது.

முதல்-அமைச்சர் மு..ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று (9.7.2021) பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு..ஸ்டாலின் பேசியதாவது:-

தொய்வின்றி செயல்படுத்த...

பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற் படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான் மையினருக்கான கல்வி, பொருளாதார மேம்பாட்டுப் பணிகளைத் தொய்வின்றி விரைந்து மேற்கொள்ள வேண்டும். இந்த பிரிவினர் மற்றும் சீர்மரபின ருக்கான நலத்திட்டங்களை தாமத மின்றி செயல்படுத்த வேண்டும்.

அந்த துறையின்கீழ் நடத்தப்படும் விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தரமான உணவு மற்றும் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.

கல்வி உதவி தொகை

கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை மேம்படுத்தி மாணவ, மாணவியர்கள் மேற்படிப்புகளில் அதிகளவில் சேர வழிவகை செய்ய வேண்டும். மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை உரிய நேரத்தில் வழங்கப்பட வேண்டும்.

அவர்களுக்கு மிதிவண்டிகளைக் கல்வியாண்டின் தொடக்கத்திலேயே வழங்க வேண்டும். 69 விழுக்காடு இட ஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் விசா ரணைக்கு வரும்போது மூத்த வழக் குரைஞரை நியமித்து 69 விழுக்காடு இடஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும்.

பயனாளிகளுக்கு

சலவைப் பெட்டிகள், தையல் எந்திரங்கள் ஆகியவற்றை தாமதமின்றி பயனாளிகளுக்கு வழங்க வேண்டும். மாறிவரும் சூழலுக்கு ஏற்ப மாற்றுத் தொழில்களுக்கு உதவும் வகையில் திட்டங்களை வகுக்க வேண்டும்.

தமிழ்நாடு நரிக்குறவர் நலவாரியம், சீர்மரபினர் நல வாரியம், உலமா மற்றும் இதரப் பணியாளர்கள் நலவாரி யங்கள் மூலமாக உடனடியாக நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட வேண்டும்.

நரிக்குறவர் சமுதாய மக்களுக்காக தனி வாழ்விடங்களை உருவாக்க வேண் டும். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கும் திட் டத்தை விரிவுபடுத்த வேண்டும்.

மாவட்டங்களில் செயல்படும் இஸ் லாமிய மற்றும் கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கங்கள் மூலம் நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு சென்றடை வதை உறுதி செய்ய வேண்டும். மசூதிகள் மற்றும் தேவாலயங்களில் புனரமைப்புப் பணிகளைச் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.

மீட்க நடவடிக்கை

தமிழ்நாடு வக்பு வாரியத்தின்கீழ், பதிவு செய்யப்படாத வக்பு வாரியங் களைப் பதிவுசெய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பில் உள்ள வக்பு சொத்துகளை மீட்க நட வடிக்கை எடுக்க வேண்டும். வக்பு நிறுவனச் சொத்து ஆவணங்களைக் கணினி மயமாக்கி, வாரிய பணிகள் மற்றும் சேவைகளை ''- சேவையாக மாற்ற வேண்டும்.

தமிழ்நாடு ஹஜ் குழு மூலம் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் எவ்விதத் தடங்கலும் இல்லாமல் பய ணம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும். ஜெருசலேம் புனிதப் பயணம் செல்லும் பயணிகளுக்கு வழங் கப்படும் நிதி உதவியை உரிய காலத்தில் முறையாக வழங்க வேண்டும்.

கல்வி கடன் வழங்க....

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் ஆகியவற்றின் மூலம் அதிகமானவர் களுக்கு உரிய காலத்திற்குள் கடன் வழங்க வேண்டும். இந்நிறுவனங்கள் மூலம் கல்விக்கடன் வழங்கவும் நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

சிறுபான்மையினருக்கான சச்சார் கமிட்டியின் பரிந்துரைகளான அனைத்து சிறுபான்மையினருக்கும் கல்வி உதவித்தொகை வழங்குதல், சிறுபான்மையின இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி, தொழில் முனைவோருக்கு சிறப்பு பயிற்சி, தொழில் தொடங்க கடன் உள்ளிட்ட பரிந்துரைகளை செயல்படுத்த வேண் டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment