செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 10, 2021

செய்தியும், சிந்தனையும்....!

புரிந்ததும் - புரியாததும்!

* காசி - பாரதப் பண்பாட்டுக் கல்லூரி ஆண்டு விழாவையொட்டி நடத்தப்பட்ட 'கிரிக்கெட்'டின்போது - விளையாட்டு வீரர்களின் உடை பாரதிய பாணியில், நேர்முக வருணனை சமஸ்கிருதத்தில்.

- 'விஜயபாரதம்' ஆர்.எஸ்.எஸ். இதழ்   

>> யாருக்குப் புரிந்ததாம்? ஒன்று மட்டும் புரிந்தது - ஆக கிரிக்கெட் என்பது அவாள் விளையாட்டே!

வெறுப்பும் பொறுப்பும்!

* கேள்வி: கர்மா, கர்மவினை அப்படின்னு சொல்றாங்களே.. அது என்ன?

 பதில்: அன்றைக்குக் 'கோ பேக் மோடி'ன்னு சொன்னவங்க இன்றைக்கு பிரதமர் மோடியை நேரில் போயி சந்திக்கிறார்கள். இதுதான் கர்மா, கர்மவினை.

'விஜயபாரதம்' ஆர்.எஸ்.எஸ். இதழ் 2.7.2021   

>>  காக்கா கருப்பு - கந்தசாமி கருப்பு - இரண்டும் ஒண்ணு என்று சொல்லும் பேதமையை என்ன சொல்ல!

'கோ பேக் மோடி'  என்று அன்று சொன்னது - மக்கள் வெறுப்பு. இன்று மோடியைச் சந்தித்தது - ஒரு பிரதமரை ஒரு முதல் அமைச்சர் சந்திப்பது என்பது அவரவர்களின் ஆட்சிப் பொறுப்பு!


No comments:

Post a Comment