335 ‘பெரியார் பிஞ்சு’ சந்தாக்கள் வழங்க முடிவு தந்தை பெரியார் பிறந்த நாள் விழா திராவிடர்களின் தேசியத் திருவிழாவாக கொண்டாடப்படும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 24, 2021

335 ‘பெரியார் பிஞ்சு’ சந்தாக்கள் வழங்க முடிவு தந்தை பெரியார் பிறந்த நாள் விழா திராவிடர்களின் தேசியத் திருவிழாவாக கொண்டாடப்படும்

மதுரை  மண்டல திராவிடர் கழக கலந்துரையாடலில் (காணொலி) முடிவு

மதுரை, ஜூலை 24 மதுரை மண்டல திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்  20.7.2021 செவ்வாய் மாலை 6 மணி அளவில் நடைபெற்றது (காணொலி). இக்கூட்டத்தில் மதுரை மண்டல தலைவர் கா.சிவகுருநாதன் தலைமை யேற்று உரையாற்றினார்.

தென் மாவட்ட பிரச்சார குழு தலைவர் தே.எடிசன்ராஜா, பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில தலைவர் முனைவர் வா.நேரு, மாநில வழக்குரைஞரணி செயலாளர், மு.சித்தார்த்தன், மாநில பகுத்தறிவாளர் கழக துணை தலைவர் கா.நல்லதம்பி, மாநில வழக்குரைஞரணி துணை செயலாளர் நா.கணேசன், கழக காப்பாளர் சே.முனியசாமி ஆகியோர் முன்னிலையேற்று உரையாற்றினர். மதுரை புறநகர் மாவட்ட தலைவர் கருப்பட்டி சிவா அவர்கள் வரவேற் புரையாற்றினார் . 

மதுரை வே.செல்வம்

கழக அமைப்புச் செயலாளர் மதுரை வே.செல்வம் கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி, நிகழ் வினை ஒருங்கிணைத்து இணைப்புரையும் வழங்கினார். ஆசிரியர் அவர்களின் உழைப்பு, அணுகுமுறையால். தொடர் வெற்றியை பெறுகிறோம். ஆசிரியர் அவர்களின் மகிழ்ச்சியே நமது மகிழ்ச்சி. அவர் பெரிதும் விரும்பும் இயக்க ஏடுகளுக்கு சந்தா வழங்கிடுவது நமது கடமையாகும், பெரியாரியல் பயிற்சிவகுப்பு சிறப்பாக நடைபெற உழைத்த அனைத்து தோழர்களுக்கும் பாராட்டுகள் நன்றி எனவும் பெரியார் பிறந்தநாள் விழாவினை மிகச்சிறப்பாக கொண்டாட வேண்டியதின் அவசியம் குறித்தும் தனது உரையில் குறிப்பிட்டார்

இரா.ஜெயக்குமார்

இக்கூட்டத்தில் கழகப் பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் இயக்க செயல்பாடுகள் குறித்து உரை யாற்றினார்.

அவரது உரை வருமாறு:

செப்டம்பர் 17 அன்று மோடி பிறந்த நாளை முன்னிறுத்தி பி.ஜே.பி.யை தமிழகத்தில் விளம்பரப்படுத்த திட்டமிடு கிறார்கள். அதை முறியடிக்கும் விதமாக உடனடியாக செயலாற்ற வேண்டும். தமிழ்நாடு தற்போது நல்ல சூழ்நிலையில் இருக்கிறது. தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை எழுதினால், அதை செயல்படுத்தும் அரசாங்கம் அமைந்திருக்கிறது. தந்தை பெரியார் பிறந்த நாளை திராவிட தேசிய திருவிழாவாக கொண்ட வேண்டும்.

சென்ற ஆண்டு தந்தை பெரியார் பிறந்த நாளை மதுரையில் சிறப்பாகக் கொண்டாடினீர்கள்.

தற்போது கரோனா மூன்றாவது அலை வருவதாக கூறப்படுகிறது. அது வந்தால் அப்போது பார்த்துக் கொள்ளலாம். நாம் உடனடியாக தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவினை செப்டம்பர் 17 க்கு முன்பாகவே மக்கள் மத்தியில் சென்று சேரும் வகையில் சுவரெழுத்து பிரச் சாரத்தை முன்னெடுக்க வேண்டும். தந்தை பெரியார் பிறந்தநாளன்று அத்தனை பகுதிகளிலும் அய்யாவின் படத்தை வைத்து மாலை அணிவித்து மக்கள் மத்தியில் சென்றடையும் வகையில் கொண்டாடுவதற்கான ஏற்பாடு களை செய்ய வேண்டும்.

தந்தை பெரியார் சிலை, படிப்பகம் புதுப்பித்தல்

இராஜபாளையத்தில் இருக்கக்கூடிய பெரியார் படிப் பகத்தினை விருதுநகர் மாவட்ட தலைவர் இல.திருப்பதி மற்றும் அங்குள்ள தோழர்கள் இணைந்து 5 லட்சம் ரூபாய்க்கு மேல் வசூல் செய்து, அதனை கொண்டு நவீன வசதிகளுடன் புதுபிக்கப்பட்டிருக்கிறது. அதுபோல் ஒவ்வொரு பகுதியிலும் இருக்கக்கூடிய தந்தை பெரியார் சிலை, படிப்பகம் ஆகியவற்றை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட வேண்டும்.

மாதம் ஒரு முறை

கலந்துரையாடல்

மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதி தோழர்களையும் ஒருங்கிணைத்து தந்தை பெரியார் பிறந்தநாள், இயக்க ஏடுகளுக்கு சந்தா சேர்த்தல் போன்ற பணிகளில் ஈடுபடுத்த பொறுப்பாளர்கள் முயற்சி செய்ய வேண்டும்.

நேரடியாக சந்திக்க முடியாத இந்த ஊரடங்கு காலத்தில் காணொலி மூலம் சந்திப்பது, உரையாடுவது, கருத்துக்களை கேட்பது பெருமகிழ்ச்சி!

மாதத்திற்கு ஒரு முறையாவது இதுபோன்ற கூட்டங் களை நடத்த வேண்டும், இக்கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

- இவ்வாறு அவர் உரையாற்றினார்.

இக்கலந்துரையாடல் கூட்டத்தில்பெரியார் பிஞ்சுக்கு 335 சந்தாக்கள் வழங்குவதாக முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தீர்மானம் 1

பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் சார்பில் நடைபெற்ற பெரி யாரியல் பயிற்சி வகுப்பு மிகச் சிறப்பாக நடைபெறுவதற்கு ஒத்துழைத்த அனைத்து கழக பொறுப்பாளர்களுக்கும் இக்கூட்டம் பாராட்டுகளை தெரிவிக்கிறது. பங்குபெற்ற இருபால் மாணவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 2

உலகத் தலைவர் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவினை திராவிடர்களின் தேசியத் திருவிழாவாக எழுச்சியோடு கொண்டாடுவது என முடிவு செய்யப் படுகிறது. மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதி களிலும் சுவரெழுத்து பிரச்சாரப் பணியை உடனடியாக மேற்கொள்வது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் 3

இயக்க ஏடுகளான விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு, ஏடுகளை மக்களிடம் பரப்பும் நோக்கத்தோடு சந்தா சேர்ப்பை தொடர் பணியாக செய்வது என முடிவு செய்யப்படுகிறது.

அறிவிக்கப்பட்ட புதிய பொறுப்பாளர்கள்

மதுரை மாநகர் மாவட்டம்

பொ.பவுன்ராஜ் (மாவட்ட துணை தலைவர்), இரா.லீ. சுரேஷ் (மாவட்ட துணை செயலாளர்), இராமச்சந்திரன் (மாவட்ட அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்)

இக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து கூறியவர்கள்

மதுரை மண்டல செயலாளர் நா.முருகேசன், மதுரை மாவட்ட தலைவர் .முருகானந்தம், விருதுநகர் மாவட்ட தலைவர் இல.திருப்பதி, மதுரை மாவட்ட செயலாளர் சுப.முருகானந்தம், மதுரை புறநகர் மாவட்ட தலைவர் சுப.தனபாலன், விருதுநகர் மாவட்ட செயலாளர் தி.ஆத வன், மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் ..எரிமலை, எடிசன், கா.நல்லதம்பி, நா.கணேசன், சே.முனியசாமி, .முருகானந்தம், சுப.தனபாலன், செல்லத்துரை, செல்வ.மீனாட்சிசுந்தரம், கு.மாரிமுத்து, விடுதலை வாசகர் வட்ட தலைவர் இராஜேஸ்வரி இராமசாமி, புறநகர் .. அமைப்பாளர் மன்னர்மன்னன், மாவட்ட துணை தலைவர் பொ.பவுன்ராஜ், இளைஞரணி அமைப்பாளர் வேல்துரை, பகுதிசெயலாளர் சோ.சுப்பையா, இராஜபாளையம் நகர தலைவர் சிவக்குமார், இராஜபாளையம் நகர செயலாளர் பாண்டிமுருகன், பெரியாரியல் மாணவர் வேல்.அரவிந்த் மற்றும் கழக பொறுப்பாளர்கள் தோழர்கள் கலந்து கொண்டனர்.

 திண்டுக்கல் மண்டல கலந்துரையாடலில்

பெரியார் பிஞ்சுசந்தா 320 அறிவிப்பு

21.07.2021 அன்று கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், அமைப்புச் செயலாளர் மதுரை வே.செல்லம்ஆகியோர் பங்கேற்ற திண்டுக்கல் மண்டல காணொலி கலந்துரையாடல் கூட்டத்தில் கழகத் தோழர்களால் அறிவிக்கப்பட்ட பெரியார் பிஞ்சு சந்தாக்கள்:

திண்டுக்கல் மாவட்டம்

இரா.வீரபாண்டியன்,திண்டுக்கல் 50

நாகராசன், திண்டுக்கல் 10

கிருஷ்ணமூர்த்தி, திண்டுக்கல் 10

காஞ்சித்துரை, திண்டுக்கல் 25

இராஜேந்திரன், திண்டுக்கல் 15

வழக்குரைஞர் ஆனந்தமுனிராசு 20

செல்வம்  திண்டுக்கல் 25

மோகன், திண்டுக்கல் 5

தேனி    மாவட்டம்

ரெகுநாகநாதன், போடி 25

மணிகண்டன், தேனி 25

நாகராஜன், ஆண்டிப்பட்டி  10

அன்புக்கரசன்,பெரியகுளம்  25

கருப்புச் சட்டை நடராசன்  5

சுருளிராஜன், தேனி  5

பழனி மாவட்டம்

பெரியார் இரணியன், பழனி  50

முருகன், பழனி  10

அருண்குமார், பழனி  5

கூடுதல்  320

தொகுப்புநூலகர் நெல்லுப்பட்டு வே.இராஜவேல், தஞ்சை

No comments:

Post a Comment