27 விழுக்காடு இட ஒதுக்கீடு திமுக ஆட்சி அமைந்ததும் சமூக நீதிப் போராட்டத்தின் முதல் கட்ட வெற்றி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 30, 2021

27 விழுக்காடு இட ஒதுக்கீடு திமுக ஆட்சி அமைந்ததும் சமூக நீதிப் போராட்டத்தின் முதல் கட்ட வெற்றி

முதலமைச்சர் மு..ஸ்டாலின்

சென்னை,ஜூலை30- இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்க ளுக்கான 27 விழுக்காடு இட ஒதுக்கீடு தமிழ்நாட்டுக்கு கிடைத்த வெற்றி என்று குறிப் பிட்டுள்ள முதல் அமைச்சர் மு..ஸ்டாலின், 50 விழுக்காடும் இட ஒதுக்கீட்டை பெற அரசு தொடர் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நேற்று(29.7.2021) வெளியிட்ட அறிக்கை:

ஒன்றிய அரசுப்பள்ளிகளி லும் கல்வி நிலையங்களிலும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 50 விழுக் காடுமாக உயர்த்த வேண்டும் என்று திமுக சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். மண் டல் ஆணையத்தின் பரிந்து ரைகள் அமலுக்கு வந்து கால் நூற்றாண்டு ஆனபின்னரும் முழுமையாக செயல்வடிவம் பெறவில்லை. இந்த நிலையில் இன்று (29.7.2021) ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு ஆறுதல் தருவதாக உள்ளது. சமூக நீதி வரலாற்றில் முக்கிய நகர்வாக உள்ளது.

மாநிலங்கள் அகில இந்திய தொகுப்புக்கு வழங்கும் 15 விழுக்காடும், மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் இளங் கலை இடங்களிலும், 50 விழுக் காடு முதுநிலை மருத்துவ இடங்களிலும் இதர பிற்படுத் தப்பட்ட மாணவர்களுக்கு 27 விழுக்காடும் இட ஒதுக்கீடு வழங்கும் ஒன்றிய அரசின் முடிவு தமிழ்நாட்டுக்கு கிடைத்த வெற்றியாகும். குறிப்பாக திமுகவின் சமூக நீதி போராட் டத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

திமுக தொடர்ந்த வழக்கில் தான் சென்னை உயர்நீதிமன்றம் கடந்தாண்டு ஜூலை 27ஆம் தேதி அகில இந்திய தொகுப் புக்கு அளிக்கப்படும் மருத் துவக்கல்வி இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டு உரிமை உள்ளது என்ற வரலாற்றுச்சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது. 2021-_2022 ஆம் கல்வியாண்டில் இருந்து மொத்தம் 4,000 இதர பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி கிடைக்கப் போவதை திமுகவின் சட்டரீதியான சமூக நீதிப்போராட்டம் மூலம் உறுதி செய்து சாதனை படைத் துள்ளது.

திமுக ஆட்சி அமைந்ததும் கிடைத்துள்ள சமூக நீதிப் போராட்டத்தின் இந்த முதல் வெற்றியில் தமிழ்நாட்டில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் மருத்துவக் கல்வி அகில இந்திய தொகுப் பில் 27 விழுக்காடும் இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள் ளது என்றாலும், 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டின்படி பிற் படுத்தப்பட்டோருக்கான 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங் கப்பட வேண்டும் என்பது தான் எங்கள் அழுத்தமான கோரிக்கையாகும். அதை அடை யும் வரை திமுகவின் தலைமையிலான அரசு தொடர் நட வடிக்கை மேற் கொள்ளும்.

இவ்வாறு முதலமைச்சர் மு.. ஸ்டாலின் தனது அறிக் கையில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment