கணினி- தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கலை, அறிவியல் படிப்புகளை வழங்கத் திட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 30, 2021

கணினி- தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கலை, அறிவியல் படிப்புகளை வழங்கத் திட்டம்

திருச்சி அய்.அய்.அய்.டி இயக்குநர் தகவல்

சென்னை, ஜூலை 30 கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கலை, அறிவியல் படிப்பு களையும், குறுகிய கால சான்றிதழ் படிப்பு உள்ளிட்ட பயிற்சிகளை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ள தாக இந்தியத் தகவல் தொழில் நுட்பக் கழகத்தின் திருச்சி வளாக இயக்குநர் என்.வி.எஸ்.நரசிம்ம சர்மா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர் களிடம் கூறியதாவது:

இந்தியத் தகவல் தொழில் நுட்பக் கழகத்தின் திருச்சி வளாகத் தில் இளநிலை மற்றும் முதுநிலைப் பிரிவில் கணினி அறிவியல் பொறியியல் மற்றும் மின்னணு- தகவல் தொடர்பு பொறியியல் ஆகிய துறைகள் உள்ளன. இவை மட்டு மின்றி பல்வேறு பாடப்பிரிவுகளில் ஆராய்ச்சிப் படிப்புகள் உள்ளன.

ஜூலை 31ஆம் தேதி இணைய வழியில் நடைபெறவுள்ள பட்ட மளிப்பு விழாவில் கணினி அறிவியல் பொறியியல் துறையில் 25 பேரும், மின்னணு- தகவல் தொடர்பு பொறியியல் துறையில் 21 பேரும் பட்டம் பெறவுள்ளனர்.

ரூ.128 கோடி செலவில் கல் லூரிக்குச் சொந்தக் கட்டடம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இன்னும் 2 மாதங்களில் அனைத் துப் பணிகளும் நிறைவடைந்து கல்லூரி முழுமையாகப் பயன் பாட்டுக்கு வரும்.

கல்லூரியில் இணையவழிச் சான்றிதழ் பயிற்சி, டிப்ளமோ மற்றும் பட்டப் படிப்புகளை நடத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். குறிப்பாக கணினி மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த கலை, அறிவியல் படிப்புகளைத் தொடங்கத் திட்டமிட்டு வருகி றோம்.

கல்லூரியில் தற்போதுள்ள 2 இளநிலைப் பாடப் பிரிவுகளில் தற்போது தலா 30 ஆக உள்ள மாணவர் சேர்க்கை எண்ணிக் கையைத் தலா 60 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கல்லூரிக்கு அனுமதிக்கப்பட்ட 16 பேராசிரியர் பணியிடங்களில் தற்போது 13 பேர் பணியில் உள் ளனர்.

மேலும், தேவைக்கேற்ப 11 பேரைப் பணி நியமனம் செய்ய ஆளுநர் குழுவில் ஒப்புதல் பெறப் பட்டுள்ளது.

தேவைக்கேற்ப இவர்கள் பணியமர்த்தப்படுவர். சிறந்த கல்வி நிலையங்களில் சிறந்த முறையில் பிஎச்டி முடித்தவர்களை மட்டுமே பணியமர்த்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment