பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட அவதூறு வழக்குகளை திரும்பப் பெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 30, 2021

பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட அவதூறு வழக்குகளை திரும்பப் பெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை, ஜூலை 30  பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட அவதூறு வழக்கு களை திரும்ப பெற முதலமைச்சர் மு..ஸ்டாலின் உத்தரவு பிறப்பித் துள்ளார்.

திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறு தியின் அடிப் படையில் 90 பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற முதல மைச்சர்  மு..ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 2012ஆம் ஆண்டு முதல்  2021-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அவதூறு பேச்சுக்கள் மற்றும் செய்தி வெளியீடு களுக்காக தினசரி மற்றும் வாரப் பத்திரிகைகளின் செய்தி ஆசிரியர், அச்சிட்டவர், வெளியிட்டவர் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களின் செய்தி ஆசிரியர், பேட்டியளித்தவர் ஆகியோர் மீது சுமார் 90 அவதூறு வழக்குகள் போடப் பட்டிருந்தன.

திராவிட முன்னேற்றக் கழகத் தேர்தல் அறிக் கையில் பத்திரிகையாளர்கள் மீது பழிவாங்கும் நோக்கத்தில் போடப்பட்ட அவதூறு வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அந்த வாக்குறுதியை நிறை வேற்றும் வகையில், பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட 90 வழக்குகளைத் திரும்பப் பெறு வதற்கு  தமிழ்நாடு முதலமைச்சர்  மு..ஸ்டாலின்  ஆணையிட்டுள்ளார் என்று அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment