சீனாவின் ‘செயற்கை சூரியன்’ புதிய சாதனை... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 11, 2021

சீனாவின் ‘செயற்கை சூரியன்’ புதிய சாதனை...

பெய்ஜிங், ஜூன் 11 சீனாவில் தயாரிக்கப் பட்ட செயற்கை சூரியன் புதிய சாதனை படைத்துள்ளது. செயற்கை சூரிய ஒளியால்  உண்மையான சூரியனை விட எட்டு மடங்கு அதிக வெப்பத்தை உருவாக்க முடியும். செயற்கை சூரியன் என்பது ஒரு அணுக்கரு இணைவு உலை ஆகும். இது மேம்பட்ட பரிசோதனை சூப்பர் கண்டக்டிங் டோகாமாக் (ஈஸ்ட்) என்று அழைக்கப்படுகிறது. ஒரு புதிய அணு உலையில் 12 கோடி டிகிரி செல்சியஸ் வெப்பத்தை 110 வினாடிகள் தக்கவைக்க முடிந்ததே புதிய சாதனையாகும். சூரியனின் உண்மையான வெப்பநிலை 1.5 கோடி டிகிரி செல்சியஸ் மட்டுமே. இந்த உலை சீனாவின் ஹைபெலில் உள்ள அறிவியல் அகாடமியில் அமைந்துள்ளது.

2035க்குள் உலகின் மிகப்பெரிய அணு இணைவு உலை உருவாக்கம் என்பது பல்வேறு நாடுகளின் கூட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியே சீனாவின் ஈஸ்ட் ஆகும். சீனாவைத் தவிர, இந்தியா, அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான், ரஷ்யா போன்ற நாடுகள் சர்வதேச வெப்ப அணு பரிசோதனை உலையில் ஒத்துழைக்கின்றன.

No comments:

Post a Comment