2-டிஜி கரோனா மருந்து பாக்கெட் விலை ரூ.990 ஆக நிர்ணயம்

புதுடில்லி, ஜூன்11 பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறு வனம் (டிஆர்டிஓ) கண்டு பிடித்துள்ள 2-டிஜி கரோனா மருந்து பாக்கெட் விலை ரூ.990 ஆக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

டிஆர்டிஓ அமைப்பின் ஆய்வக மான இன்ஸ்டிடியூட் ஆப் நியூக்ளியார் மெடிசின் அண்ட் அலைடு சயின்சஸ், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வர்களை குணப் படுத்த உதவும் 2-டிஜி என்ற மருந்தை கண்டுபிடித்துள்ளது. தூள் வடிவிலான இந்த மருந்தை தயாரித்து விற்பனை செய்ய அய்தராபாத்தை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் டாக்டர் ரெட் டிஸ் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தீபக் சப்ரா கூறும்போது, “கரோனா நோயாளி களை குணப்படுத் தும் 2-டிஜி மருந்தின் ஒரு பாக்கெட் விலை ரூ.990 ஆக நிர்ணயிக்கப் பட்டுள்ளது

உற்பத்தியை அதிகரித்து நாடு முழுவதும் உள்ள அனைத்துத் தரப்பு மக்களுக்கும் விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

டாக்டர் ரெட்டிஸ் நிறு வனம் கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கை யில், “நாடு முழுவதும் உள்ள அனைத்து தரப்பு மக்களும் வாங்கும் வகையில் 2-டிஜி மருந்தின் விலை நிர்ணயம் செய்யப் படும்என கூறப்பட்டிருந்தது.

ஆனால், அந்த மருந்துக்கு இப் போது அதிக விலை நிர்ணயிக்கப்பட் டிருப்பது அனைவரையும் அதிர்ச்சி யில் ஆழ்த்தி உள்ளது

Comments
Popular posts
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image
50% தடுப்பூசிகளை அபகரித்த 9 கார்ப்பரேட் மருத்துவமனைகள்
Image
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!
Image