கிருமிநாசினி, என்95 முகக்கவசம் உள்ளிட்ட 15 பொருள்கள் அதிகபட்ச விலை நிர்ணயம்: தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை,ஜூன் 11 தமிழ்நாட் டில் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்ததை அடுத்து, கிருமி நாசினி, முகக்கவசம், பிபிஇ கிட், கையுறை உள்ளிட்டவற்றை வெளியில் அதிக அளவில் ஆளா ளுக்கு விற்பதாக புகார் வந்துள் ளதால் இவற்றை அத் தியாவசியப் பொருள்களாக அறிவித்து, தமிழ்நாடு அரசே விலையையும் நிர்ணயித் துள்ளது.

தமிழ்நாட்டில் கரோனா முதல் அலை, அதைத் தொடர்ந்து இரண் டாவது அலை பரவல் காரணமாக லட் சக்கணக்கானோர் பாதிக்கப் பட்டதும், ஆயிரக்கணக்கா னோர் உயிரிழந்ததும் நிகழ்ந் தது. இன்றும் தொற்று எண்ணிக்கை தினசரி 20,000 என்கிற அளவிலும், உயிரி ழப்பு 350க்கு மேலாகவும் உள்ளது.

கரோனா பரவல் அதிகரித் ததும் பொதுமக்களிடையே முகக்கவசம், கிருமி நாசினி, கையுறை போன்ற பொருள்களின் பயன்பாடு அதிகரித் தது. இதைப் பயன்படுத்திக் கொண்ட வியாபாரிகள் சாதா ரண முகக்கவசத்தை 10 ரூபாய்க் கும், என்.95 முகக்கவசத்தை 150 ரூபாய் வரையிலும், கிருமி நாசினியை 150 ரூபாய் வரையிலும் விற்பனை செய்தனர். பின்னர் அரசு தலையீட்டின் பேரில் விலைகள் கட்டுக்குள் வந்தன.

இதுகுறித்து அரசாணை இன்று வெளியானது. அதில் தமிழ்நாடு அரசு மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை மூலமாக 15 பொருள்கள் தமிழ்நாடு அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. அவற் றுக்கான சில்லறை விலைகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

அதன் விவரம் வருமாறு: என்95 முகக்கவசம் ஒன்று - ரூ.22, கிருமிநாசினி 200 மி.லி.- ரூ.110, கையுறை பரிசோதிப்பது 1 செட் - ரூ.5.75, கையுறை (ஸ்டெரைல்) 1 செட்- ரூ.15, முகக்கவசம் (2 அடுக்கு) - ரூ.3, முகக்கவசம் (3 அடுக்கு) - ரூ.4, அறுவை சிகிச்சை முகக்கவசம் (பேப்ரிக் கோட்) - ரூ.4.50, ஒரு முறை பயன்படுத்தும் உடல் கவசம் - ரூ.12, அறுவை சிகிச்சை கவுன் - ரூ.65, மறுஉருவாக்க முகக்கவசம் - ரூ.80, ஆக்சிஜன் முகக்கவசம் - ரூ.54, பல்ஸ் ஆக்சி மீட்டர் - ரூ.1500, ஃப்லோ மீட் டர் - ரூ.1520, முகத்தை மூடும் ஷீல்டு கவசம் - ரூ.21, பிபிஇ கிட் -ரூ.273 இவ்வாறு விலைகள் நிர் ணயிக்கப்பட்டுள்ளன.

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image