கார்ப்பரேட் நன்கொடையில் 80 சதவிகிதத்தை வாரிக் குவித்த பாஜக 2019-20இல் மட்டும் ரூ. 271 கோடியே 50 லட்சம் நிதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 11, 2021

கார்ப்பரேட் நன்கொடையில் 80 சதவிகிதத்தை வாரிக் குவித்த பாஜக 2019-20இல் மட்டும் ரூ. 271 கோடியே 50 லட்சம் நிதி

 புதுடில்லி, ஜூன் 11 கடந்த 2019--2020 நிதியாண்டில், அர சியல் கட்சிகள் பெற்ற ஒட்டு மொத்த கார்ப்பரேட் நன் கொடையில் பாஜக மட்டும் சுமார் 80 சதவிகிதத் தை வாரிக் குவித்திருப்பது தெரிய வந்துள்ளது.

அதாவது, எலக்டோரல் டிரஸ்ட்(Electoral Trust) எனப்படும் கார்ப்பரேட் தேர்தல் அறக்கட்டளைகள் மூலம்2019_-20 நிதியாண்டில் ரூ. 271 கோடியே 50 லட் சத்தைப் பாஜக பெற்றுள்ளது.இதில், ‘ப்ருடெண்ட் அறக் கட்டளைநிறுவனத்திடம் இருந்து ரூ. 217 கோடியே 75 லட்சத்தையும், ஜன்கல்யாண் தேர்தல் அறக்கட்டளையிடம் இருந்து ரூ. 45 கோடியே 95 லட்சத்தையும் பாஜக பெற்றுள்ளது. இதுதவிர ஏபி பொதுத் தேர்தல் அறக்கட் டளை ரூ. 9 கோடி, சமாஜ் தேர்தல் அறக்கட்டளை ரூ. 3 கோடியே 75 லட்சம் என பாஜகவுக்கு நன்கொடை களைத் தூக்கிக் கொடுத் துள்ளன.

இதே காலத்தில், காங் கிரஸ் ரூ. 58 கோடி அளவிற்கே கார்ப்பரேட் நன்கொ டையைப் பெற்றுள்ளது. ப்ரு டெண்ட் அறக்கட்டளையில் இருந்து ரூ. 31 கோடி, ஜன்கல் யாண் அறக்கட்டளையில் இருந்து ரூ. 25 கோடி, சமாஜ்அறக்கட்டளையில் இருந்து ரூ. 2 கோடி என இந்த நிதியை காங்கிரஸ் திரட்டியுள்ளது.மாநில கட்சிகள் அளவில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி ரூ. 130 கோடி,சிவசேனா ரூ. 111 கோடி, ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் ரூ. 92 கோடி, அதிமுக ரூ. 89 கோடி, திமுக ரூ. 64 கோடி, ஆம் ஆத்மி ரூ. 49 கோடி என கார்ப்பரேட் நன்கொடைகளை பெற்றுள் ளன. இந்தியாவிலுள்ள கார்ப் பரேட் நிறுவனங்கள்ப்ரு டெண்ட்போன்ற பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மூலமே அரசியல் கட்சி களுக்கு நன்கொடைகளை வழங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment