25 மாவட்டங்களில் கரோனா கட்டுக்குள் வந்துள்ளது; ஊரடங்குக்கு பெரிய அளவிலான வெற்றி!

 சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்

சென்னை, ஜூன் 11 தமிழ்நாட்டில் ஊரடங்கு பெரிய அளவிலான வெற்றியை கொடுத்துள்ளது. 25 மாவட்டங்களில் கரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது என்று சுகா தாரத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்று பேரிடர் காலத்தில் பணிபுரிந்து வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு 3 ஆயிரம் உணவுப் பொட்டலங்கள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து அமைச்சர் மா.சுப்பிர மணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சென்னை அரசு பொது மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர்

8-ஆவது மாடியில் உயிரிழந்து கிடந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத் தும் பணி நடந்து முடிந்துள்ளது. இதுபோன்ற அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் அனைத்து இடங்களிலும், கண்காணிப்பு கேம ராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

முழு ஊரடங்கு பெரிய அளவி லான வெற்றியைத் தந்துள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட் டவர்களின் எண்ணிக்கை தற்போது சரிபாதியாக குறைந்துள்ளது. 42 ஆயிரம் எண்ணிக்கையில் படுக்கை களும் காலியாக இருக்கும் சூழல் உருவாகியுள்ளது. தமிழகத்தில் 25 மாவட்டங்களில் கரோனா மிகப்பெரிய அளவில் கட்டுக்குள் வந்துள்ளது. 4 மாவட்டங்களில் மட்டும் கரோனா பாதிப்பு ஏற்ற இறக்கத்துடன் இருக்கிறது. 9 மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நிலை இருக் கிறது. மிக விரைவில் கரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

கருப்புப் பூஞ்சை நோயால் இது வரை 1,052 பேர் பாதிக்கப்பட் டுள்ளனர். ஒருவர் கருப்புப் பூஞ்சையினால் பாதிக்கப்பட்டால், அவ ருக்கு 14 நாட்கள் மருந்தளிக்க வேண்டும். ஒருவருக்கு 14 முதல் 15 குப்பிகள் மருந்து தேவைப்படுகிறது. ஒட்டுமொத்தமாக 35 ஆயிரம் மருந்துக் குப்பிகள் வேண்டும் என மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். அதில் இதுவரை 3,060 மருந்துக் குப்பிகள்தான் வந்துள்ளன. கரோ னாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந் தவர்களுக்கு, அவர் வேறு ஒரு காரணத்தால் உயிரிழந்துள்ளார் என இறப்பு சான்றிதழ் கொடுக் கப்படுகிறது எனவும், இறப்பு எண் ணிக்கை குறைத்து காட்டப்படுகிறது எனவும் எதிர்க்கட்சி தலைவர் பழனி சாமி குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் அது உண்மையல்ல.

கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டு, மூச்சுத்திணறல் ஏற்படும் போதுதான் பலரும் மருத்துவ மனைக்கு வருகின்றனர். இதனால் அவர்களது நுரையீரல் அதிகளவில் பாதிக்கப்படுகிறது. தொடர்ந்து 25 நாள்களுக்கு மேலாக மருத்துவ மனையில் சிகிச்சை பெறும்போது, அந்த நோயாளிக்கு தொற்று இல்லை என உறுதி செய்யப்படுகிறது. ஆனால் நுரையீரல் பாதிப்பால் அவர் உயிரிழந்து விடுகிறார். அவர் இறந்தவுடன், மருத்துவர்கள் அய்சிஎம்ஆர். வழிகாட்டுதல்படி, இறப்பு சான்றிதழ் அளிக்கின்றனர். இது முதல்வராக இருந்து, தற்போது எதிர்கட்சி தலைவராக இருப்ப வருக்கு தெரியாமல் போனது வருத்தம் அளிக்கிறது.

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணி யம் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டபோது, அவருக்கு கரோனா தொற்று இருந்துள்ளது. ஆனால் அவர் உயிரிழக்கும்போது, அவருக்கு தொற்று இல்லை. இதே போல்தான் எச்.வசந்தகுமாரின் இறப்பும் நிகழ்ந்தது. எனவே எதிர்க்கட்சி தலைவர் வீணாக பழி சுமத்துவதை நிறுத்தவேண்டும். தங்களது ஆட்சியின்போது என்ன அணுகுமுறைகளை, நடைமுறை களை மேற்கொண்டீர்களோ, அதைத்தான் இந்த அரசும் செய்து கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தால் நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image