அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் - தமிழில் அர்ச்சனை

தமிழ்நாடு அரசின் முடிவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு

சென்னை, ஜூன்10- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செய லாளர் இரா.முத்தரசன் விடுத் துள்ள அறிக்கை வருமாறு,

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தை அடுத்த நூறு நாளில் நிறைவேற் றப்படும் என இந்து சமய அற நிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

மனுவாதம் விளைவித்த மூடப் பழக்க வழங்கங்களையும், வேத சாஸ்திர, உபநிடதங்கள் மூலம் வளர்க்கப்படும் புரோகிதப் புல்லிருவித்தனத்தையும்  வாழ்நாள் முழுவதும் எதிர்த்துப் போராடிய தந்தை பெரியார் 1970 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர்கள் ஆக்க வகை செய் யும் சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கோயில் கருவறை நுழைவுப் போராட்டம் அறிவித்தார். இத னைத் தொடர்ந்து அப்போதைய முதலமைச்சர் கலைஞர், அனைத்து ஜாதியினரும் அர்ச்ச கராகும் சட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என உறுதி யளித்து போராட்டத்தை முடி வுக்கு கொண்டு வந்தார். இதன் தொடர்ச்சியாக 1970 டிசம்பர் மாதம் தமிழ்நாட்டில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக்க வகை செய்யும் முறையில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டது. இதனை எதிர்த்து சனாதான வாதிகள் நீதிமன்றம் சென்று இடையூறும், தடைகளும் ஏற் படுத்தினர். இதனை எதிர்த்து சட்டநிலையிலும், சமூகத் தளத்திலும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றன.

இதற்கிடையில் கேரள மாநிலத்தில் 1993 ஆம் ஆண்டில் ஈழவர் ஜாதிப் பிரிவை சேர்ந்த ஒருவர் அர்ச்சகராக நியமிக்கப் பட்டார். இதனை எதிர்த்தும் சனாதானிகள் நீதிமன்றம் சென் றனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றத்தின் இருவர் அமர்வு மன்றம்அர்ச்சகர் பணி நியம னத்திற்கு ஒரு குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவராக இருக்க வேண்டும் என வற்புறுத்துவது முதன்மைக் கூறாக இருக்க முடியாது’’ என தீர்ப்பில் கூறியது.

இதன் பின்னர் 2006 மே 23  முதல்அமைச்சர் கலைஞர் முன் முயற்சியால்  அனைத்துச் சாதியி னரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து ஆறு மய்யங்களில் ஆகம பயிற்சி பள்ளிகள் திறக்கப் பட்டன. இதில் சமுகத்தின் பல்வேறு சாதிகளை சேர்ந்த 240 பேர் பயிற்சியில் சேர்ந்தனர். இதில் 209 பேர் தேர்ச்சி பெற் றனர். அதில் இருவர் மட்டும் மிகச் சிறிய கோயிலில் அர்ச்ச கராக நியமிக்கப்பட்டு, மீதியுள்ள 207 பேர் அர்ச்சகர் பணி நியமனத் திற்காக பல ஆண்டுகளாக காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக்கும் சட்டப்படி அடுத்த நூறு நாளில் பணி நியமனம் வழங்கப்படும் என்றும், இனி வரும் காலங்களில் கோயில்களில்  தமிழில் அர்ச் சனை செய்வதை  அரசு உறுதி செய்யும் எனவும் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் கூறியிருப்பதையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மகிழ்ச்சியோடு வரவேற்கிறது. தொடர்ந்து அர்ச்சகர் பணிகளில் இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்ய வேண் டும் என தமிழ்நாடு முதலமைச் சரையும், அரசையும் கேட்டுக் கொள்கிறது.

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image