ஏட்டுத் திக்குகளிலிருந்து...

 டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:

*   பிரதமர் மோடி அறிவித்த 10 அம்ச வளர்ச்சித் திட் டங்களை எதையும் தனது 7-ஆண்டு ஆட்சியில் செய்யவில்லை என மூத்த பத்திரிக்கையாளர் ஆகார் படேல் குறிப்பிட்டுள்ளார்.

*கேரளாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஹவாலா பண பரிமாற்றத்தை பாஜக செய்துள்ளது அம்பல மாகி வருகிறது.

* இந்தியாவில் ஜூன் 21 முதல் 18 வயதை கடந்த அனை வருக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

*     நீட் தேர்வு மிகப் பெரிய அநீதி. அதனை தமிழ் நாட்டில் ரத்து செய்ய வேண்டும் என தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி தமிழ் நாடு முதல்வருக்கு வேண்டுகோள்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

*    அனைவர்க்கும் இலவச தடுப்பூசி என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பு, உச்ச நீதிமன்றத்தின் கடுமையான விமர்சனத்திற்கும், எதிர்க்கட்சி மாநில முதல்வர்கள் கொடுத்த அழுத்தத்திற்கும் கிடைத்த வெற்றி.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

*    எல்லோர்க்கும் இலவச தடுப்பூசி என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பின் எதற்காக தனியார் மருத்துவமனைகள் கட்டணம் வசூலிக்க வேண்டும்? என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி.

*    ஒன்றிய அரசே தடுப்பூசியை மொத்த கொள்முதல் செய்வதால் அதை மாநிலங்களுக்கு பங்கீடு செய்வதில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என பொருளாதாரப் பேராசிரியர் ஜான் கூறியுள்ளார்.

தி ஹிந்து:

*     கணக்கில் வராத பணத்தை கேரள சட்டமன்ற தேர்தலில் பாஜக பயன்படுத்தியுள்ளது என கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.

தி டெலிகிராப்:

*     இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை மே மாதத்தில் 11 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

- குடந்தை கருணா

4.6.2021

Comments
Popular posts
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image
50% தடுப்பூசிகளை அபகரித்த 9 கார்ப்பரேட் மருத்துவமனைகள்
Image
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!
Image