ஆசிரியருக்குக் கடிதம் - கேரள முதல்வருக்கு பாராட்டுகள்!

தமிழ்நாட்டில் பல்வேறு  சமுதாயச் சீர்திருத்தங்களைச் செய்த தந்தை பெரியார் அவர்களின் கொள்கை வீச்சிற்கு ஆட்பட்ட நீதிக்கட்சியின் ஆளுமைக்கு பின்னர் பெருந்தலைவர் காமராசர் அவரது ஆட்சியில் ஆதிதிராவிடர் வகுப்பைச் சார்ந்த பரமேஸ்வரன் அவர்களை இந்து அறநிலையத்துறை அமைச்சராக நியமித்து, பார்த்தால் தீட்டு! தொட்டால் தீட்டு! என்ற கொடுமையை நீக்கினார். 1967இல் அறிஞர் அண்ணா அவர்களின் ஆட்சியில்  இந்தக் கேள்வி எழாமல் அனைவரும் சமம் என்ற நிலை ஏற்பட்டது.

அண்மையில் பதவியேற்ற கேரளா அமைச்சர் கிருட்டிணனுக்கும் முதல் முறையாக தேவசம் போர்டு துறை வழங்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பாரம்பரிய கோவில்கள், சபரிமலை அய்யப்பன் கோயில், திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் உள்ளிட்ட கேரள மாநிலத்தின் கோவில் ஆளுமை ஏற்கப்பட்டமை பலராலும் பாராட்டப்படுவது, மகிழ்வாகவும், தந்தை பெரியார் அவர்களின் சமதர்மக் கொள்கை பரவுவது மகிழ்வாகவும், சமூக ஏற்றமாகவும் அமைந்துள்ளது. கேரள இடதுசாரி முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களுக்கு பாராட்டுகள்!

- இரா.முல்லைக்கோ, பெங்களூரு

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image