ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 13, 2021

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

13.6.2021

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

*  பேரிடர் காலத்தில் தடுப்பூசிக்கு பூஜ்ய வரி விதிக்க வேண்டும் என ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

*  லட்சத்தீவில் பாஜக அரசால் நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரி, திரைப்பட தயாரிப்பாளர் ஆயிஷா சுல்தானா மீது தேசவிரோத வழக்கு பதிவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜக தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் அக்கட்சியில் இருந்து பெருமளவில் விலகி உள்ளார்கள்.

*  கரோனா தடுப்புப் பணியில் தோல்வியடைந்துள்ள யோகி தலைமையிலான .பி. அரசு அடுத்த ஆண்டு சந்திக்கும் சட்டமன்றத் தேர்தலில் முக்கிய பிரச்சினை சுகாதாரப் பாதுகாப்பு பற்றியதாக இருக்கும் என மூத்த பத்திரிக்கையாளர் தவ்லீன் சிங் குறிப்பிட்டுள்ளார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ஒரு கூட்டாட்சி அமைப்பில், மாநிலங்கள் கூட்டாளிகள், அடிபணிந்தவர்கள் அல்ல. என ஒன்றிய அரசின் பண்பாட்டுத்துறையின் மேனாள் செயலாளர் ஜவஹர் சர்கார் கூறியுள்ளார்.

*  உலகில் பெட்ரோல் மற்றும் டீசல் மீது இந்தியா விதித் துள்ள  நியாயமற்ற வரிவிதிப்பை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று முன்னாள் பெட்ரோலிய அமைச்சர் எம்.வீரப்பா மொய்லி மோடி அரசு மீது குற்றம் சாட்டியுள்ளார்.

தி இந்து:

*  ஒன்றிய அரசின் அமைச்சரவையில் தங்களுக்குரிய பங்கு தரப்பட வேண்டும் என அய்க்கிய ஜனதா தளத்தின் செய்தி தொடர்பாளர் ஆர்.சி.பி.சிங் தெரிவித்துள்ளார்.

தி டெலிகிராப்:

*  அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் அய்ரோப்பிய ஒன்றிய அனுபவத்தைப் பின்பற்றி இந்தியாவிலும் கரோனா காலத்தில் ஏழைகளின் கைகளில் அரசு பணம் தர வேண்டும் என நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி கூறியுள்ளார்.

- குடந்தை கருணா

No comments:

Post a Comment