ஜூன் 10 இல் எழுச்சியோடு தொடங்கிய கோவை மண்டல பெரியாரியல் பயிற்சி வகுப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 13, 2021

ஜூன் 10 இல் எழுச்சியோடு தொடங்கிய கோவை மண்டல பெரியாரியல் பயிற்சி வகுப்பு

கோவை, ஜூன் 13 தமிழ்நாடு முழுவதும் பெரியார் மணியம்மை நிகர் நிலைப் பல்கலைக் கழகம் -பெரியார் சிந்தனை உயராய்வு மய்யத்தின் சார்பில் 19 மண்டலங்களில் பெரியாரியல் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.

கோவை மண்டல பெரியாரியல் பயிற்சி வகுப்பு தொடக்க விழா 10.6.2021 அன்று மாலை 5.30 மணிக்கு பெரியார் பெருந்தொண்டர் வசந்தம் கு.இராமச்சந்திரன் அய்யா தலைமையில் நடைபெற்றது

கோவை மாவட்ட தலைவர் .சந்திரசேகர் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.

பொதுச் செயலாளர் இரா. ஜெயக்குமார்  அவர்கள் மாணவர்களுக்கு வழிகாட்டி தொடக்க உரையாற்றினார்.

பெரியார் மருத்துவ குழும இயக்குனர் மருத்துவர் இரா.கவுதமன்,  மாநில அமைப்புச் செயலாளர் .சண்முகம், மாநில வழக்குரைஞர் அணி துணைத் தலைவர் .பாண்டியன், கோவை மண்டல தலைவர், .கருணாகரன், கோவை மண்டல செயலாளர் .சிற்றரசு, மேட்டுப்பாளையம் மாவட்டத் தலைவர் சு.வேலுச்சாமி,  மேட்டுப்பாளையம் மாவட்ட செயலாளர் கா.சு ரங்கசாமி, திருப்பூர் மாவட்ட தலைவர் இரா.ஆறுமுகம், திருப்பூர் மாவட்ட செயலாளர் யாழ் ஆறுச்சாமி, கோவை மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்,  தாராபுரம் மாவட்ட தலைவர் .கிருஷ்ணன், தாராபுரம் மாவட்ட செயலாளர் .சண்முகம், நீலமலை மாவட்டத் தலைவர் மு.வேணுகோபால், நீலமலை மாவட்ட செயலாளர் மு.நாகேந்திரன், கோவை மண்டல மகளிரணி செயலாளர் .கலைச்செல்வி, கோவை மண்டல இளைஞரணி செயலாளர் .பிரபாகரன், கோவை மண்டல மாணவரணி செயலாளர் மு.ராகுல்,  விடுதலை செய்தியாளர் .மு.ராஜா ஆகியோர் முன்னிலை ஏற்று கருத்துரை வழங்கினர்.

திராவிடர் கழக துணைத் தலைவர்  கவிஞர் கலி. பூங்குன்றன்பெரியார் ஓர் அறிமுகம்என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

முதல் நாள் வகுப்பில் 50 மேற்பட்ட மாணவர்கள் வருகை தந்து பயிற்சி பெற்றனர்!

பயிற்சி நிறைவில் 5க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை கேள்வியாக கேட்டுக் தெளிவு

பெற்றனர்.

பயிற்சியில் வகுப்பில் பங்கேற்ற புதிய மாணவர்கள் பலரும் தந்தை பெரியாரை பற்றி இன்றைய வகுப்பில் ஏராளமான செய்திகளை தெரிந்து கொண்டதாகவும், வகுப்பு மிக சிறப்பாக இருந்ததெனவும், பயனுள்ள வகுப்பு எனவும், உணர்வூட்டுவதாக இருந்தாகவும்,சிறப்பான கருத்துக்களை எடுத்து கூறிய கவிஞர் அய்யா அவர்களுக்கு நன்றி என பல புதிய மாணவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்!

நிகழ்வில் மாவட்ட இளைஞரணி தலைவர் திராவிடமணி, தோழர் தமிழ்முரசு உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர்.

காணொலி ஒருங்கிணைப்பை மாணவர் கழக தோழர் ..கவுதமன் சிறப்பாக நெறியாழ்கை செய்திருந்தார்.

நிறைவாக கோவை மாநகர தலைவர் புலியகுளம் .வீரமணி நன்றியுரை வழங்கினார்.

No comments:

Post a Comment