பத்ம சேஷாத்திரி பள்ளியில் 10 ஆண்டுகளில் 300க்கும் மேற்பட்ட மாணவிகள் பாதிப்பு

பள்ளி முதல்வர் கீதா, தாளாளர் ஷீலாவிடம் மீண்டும் விசாரணை நடத்த முடிவு

சென்னை,ஜூன்10- சென்னை பத்ம சேஷாத்திரி பள்ளி மாண விகளுக்கு பாலியல் தொல்லை தொடர்பான விவகாரத்தில் அப்பள்ளியின் முதல்வர், தாளாளர் ஆகியோரிடம் காவல்துறையினர்  மீண்டும் விசா ரணை நடத்த உள்ளனர்.

அப்பள்ளி மாணவிகளிடம் பாலியல் தொல்லை கொடுத்த வழக் கில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலன் அளித்த வாக்கு மூலத்தின் படி, கடந்த 10 ஆண்டு களில் ஆசிரியரால் பாதிக்கப்பட்ட 300 மாணவிகளின் பட்டியலை காவல்துறையினர் சேகரித்து வரு கின்றனர்.

பத்ம சேஷாத்திரி பள்ளியின் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவி களுக்கு ஆன்லைன் வகுப்பின் போது, வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் மீது, பாதிக்கப் பட்ட மாணவிகள் தங்களது டிவிட் டர் பக்கத்தில் அவருடையே அரை நிர்வாண புகைப்படத்துடன் புகாரை பதிவு செய்தனர். இது நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து நங்கநல்லூர் இந்து காலனி, 7ஆவது தெருவை சேர்ந்த பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபலனை(வயது 59) கடந்த 24ஆம் தேதி பிடித்து விசாரணை நடத்தினர். மேலும், ஆசிரியர் பயன்படுத்திய செல்பேசி மற்றும் லேப்டாப்பை பறிமுதல் செய்து காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அதில் ஆசிரியர் மாணவிகளுடன் ஒன்றாக இருக்கும் ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்கள் சிக்கியது. அதை தொடர்ந்து அசோக் நகர் அனைத்து மகளிர் காவல்துறையினர் ஆசிரியர் ராஜகோபாலன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இந்நிலையில் ஆசிரியர் ராஜ கோபாலனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் தெரிவிக்க 'வாட்ஸ் அப்' எண் வெளியிடப் பட்டது. அதைதொடர்ந்து  பத்ம சேஷாத்திரி பள்ளியில் தற்போது படித்து வரும் மாணவிகள் மற்றும் முன்னாள் மாணவிகள் என 40க்கும் மேற்பட்டோர் 'வாட்ஸ் அப்'பில் புகார் அளித்தனர். மாணவிகளின் தொடர் புகாரால் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் ஆசிரியர் ராஜ கோபாலனை நீதிமன்ற அனுமதி யுடன் 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில்,அவர் கடந்த 10 ஆண்டுகளாக பத்ம சேஷாத்திரி பள்ளியில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு அதிக மதிப்பெண் எடுக்க உதவி செய்வதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அதேபோல், சிறப்பு வகுப்பு என மாணவிகளை பள்ளிக்கு வரவழைத்து விடுமுறை நாட்களில் பள்ளி அறையிலேயே மாணவி களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது. இந்த வகையில் கடந்த 10 ஆண்டுகளில் 300க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் பாலியல் தொல்லை கொடுத்துள்ள தாகவும், அதில் 50க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆசிரியர் ராஜகோ பாலன்மீது பள்ளி நிர்வாகத்திடன் புகார் அளித்ததும் விசாரணையில் தெரியவந்தது. ஆனால் மாணவி களின் புகாரின்படி பள்ளி நிர்வாகம் ஆசிரியர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்காமல், பள்ளியில் நடைபெறும் பாலியல் தொடர்பாக அமைக் கப்பட்ட விசாரணை குழுவிலேயே ஆசிரியர் ராஜகோபாலனையும் நியமித்திருந்தது. இதனால் தனது மீது மாணவிகள் அளித்த பாலியல் புகார்களை ஆசிரியர் சக ஆசிரியர் களுடன் இணைந்து வெளியே தெரியாமல் மறைத்து புகார் அளித்த மாணவிகளுக்கு எதிராகவே மாற்றி யதும் தெரியவந்தது.

பத்ம சேஷாத்திரி பள்ளி நிர்வாக குழு உறுப்பினர் ஒருவரின் மகனுக்கு ஆசிரியர் ராஜகோபாலன் வகுப்பு ஆசிரியராக இருந்துள்ளார். இதனால் ராஜகோபாலன் தனது வகுப்பு மாணவன் என்ற முறையில் பள்ளி நிர்வாக குழு உறுப்பினர் மகனுடன் தற்போதும் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தி கொண்டு அசைக்க முடியாக நபராக பத்மா சேஷாத்திரி பள்ளியில் இருந்து வந்துள்ளார்.

பள்ளி மாணவிகளிடம் அவர் தவறான எண்ணத்தில் பழகியதை சக ஆசிரியர்கள் மற்றும் பள்ளியின் முதல்வ  தெரிந்தும் ராஜகோபாலன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளனர் என்பது விசார ணையில் தெரியவந்தது. ஆசிரியர் ராஜகோபாலன் தனது வகுப்பு மாணவனான பள்ளி நிர்வாக குழு உறுப்பினர் மகன் இருக்கும் தைரி யத்தில் மாணவிகளுக்கு தொடர் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. 3 நாள் விசாரணையின் போது மாணவிகளின் பாலியல் விவ காரத்தில் உடந்தையாக இருந்த வர்கள் யார். பாதிக்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட மாணவிகள் யார் யார்? என்பது குறித்து 100 பக்கம் வாக்குமூலம் ஆசிரியர் ராஜகோபாலன் அளித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள் ளார். போக்சோ வழக்கு என்பதால் ராஜகோபாலன் அளித்த வாக்கு மூலத்தின் படி 10 ஆண்டுகளில் பாதிக்கப்பட்ட 300 மாணவிகளின் விபரங்களை காவல்துறையினர் ரகசியமாக சேகரித்து வருகின்றனர். ஆசிரியரால் பாதிக்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட மாணவிகள் என்று விசாரணையில் தெரியவந் துள்ளது. ஆனால் ஆசிரியர் மீது இதுவரை 40க்கும் மேற்பட்ட முன் னாள் மற்றும் தற்போதைய மாண விகள் மட்டும் புகார் அளித்துள் ளனர். மீதமுள்ள 250 மாணவிகள் பாலியல் தொடர்பாக காவல் துறைக்கு எந்த வித புகார்களும் வரவில்லை.

அதேநேரம், ஆசிரியர் ராஜ கோபாலன் அளித்த வாக்குமூலத் தின்படி பத்மா சேஷாத்திரி பள்ளி முதல்வரிடம் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட மாணவிகள் புகார் அளித்துள்ளது தெரியவந்துள் ளது. இதனால் பத்மா சேஷாத்திரி பள்ளி முதல்வர் கீதா மற்றும் தாளாளர் ஷீலா ஆகியோரிடம் விசாரணை நடத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளதாக உயர் காவல்துறையினர் தெரிவித்துள் ளனர். அதற்கான பணிகளில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Comments
Popular posts
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image
50% தடுப்பூசிகளை அபகரித்த 9 கார்ப்பரேட் மருத்துவமனைகள்
Image
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!
Image