பெரியார் பாலிடெக்னிக்கில் ஆன்லைன் மூலம் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தின விழா

வல்லம், ஜூன் 10- பெரியார் நூற்றாண்டு பாலிடெக் னிக் கல்லூரியில் உலக சுற் றுச்சூழல் தின விழா ஆன் லைன் வாயிலாக 05.06.2021 அன்று காலை 10.30 மணி யளவில் நடை பெற்றது.

விழாவில் தலைமை யேற்று உரையாற்றிய இப்பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் டாக் டர் இரா. மல்லிகா சுற் றுச் சூழலை எவ்வாறு நாம் பாதுகாப்பது என் பதைப் பற்றி குறிப்பிட் டார். மேலும் விழாவில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளிடையே பெரியார் நூற்றாண்டு பாலி டெக்னிக்கின் சிறப் பியல்கள் மற்றும் தமிழ் நாட்டின் மிகப் பெரிய தொழில் நிறுவனங்களான சென்னை அப்பல்லோ டயர்ஸ், செயின்ட் கோபெ யின், பாண்டிச்சேரி டிவிஎஸ் லூகாஸ் போன்ற நிறுவனங்களின் மூலம்  கல்லூரியில் நடத்தப்படும் வளாக நேர்காணல் மூலம் மாணவர் களுக்கு 100 சதவிகித வேலை வாய்ப்பு கள் வழங்கப்படுகின்றன என்பதைப் பற்றியும் குறிப்பிட்டார்.

விழாவில் திருச்சி, பொதுப் பணித்துறை உதவிப்பொறியாளரும் பெரியார் பாலிடெக்னிக் கின் முன்னாள் மாணவி யுமான பொறியாளர் பி. சிந்தனை செல்வி சிறப் புரை வழங்கினார்.  தனது உரையில்அறிவியல் வளர்ச்சியால் ஏற்பட்ட அபரிமிதமான தொழில் வளர்ச்சியும், மனித குலத் தின் பேராசையும், சுற்றுச் சூழலை எவ்வாறு பாதிக் கின்றது என்பது பற்றி குறிப்பிட்ட அவர், சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வழிகள் பற்றிக் கூறினார்.

உலக சுற்றுச்சூழல் தின விழாவை முன்னிட்டு பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி யின் சார்பாக பள்ளி மாணவ, மாணவிகளுக்குஉலக உயிர்களைக் காக் கும் உன்னத சுற்றுச் சூழல் காப்போம்என்ற தலைப்பி லான கட்டுரைப் போட்டி ஆன்லைன் மூலம் நடை பெற்றது. 200க்கு மேற் பட்ட மாணவ மாணவி கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் கட் டுரைகளை ஆன்லைன் வாயிலாக சமர்ப்பித்தனர்.

கட்டுரைகளை ஆய்வு செய்த வல்லுநர் குழுவின் பரிந்துரையின் அடிப் படையில் நீடாமங்கலம், நீலன் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியின் பன்னி ரண்டாம் வகுப்பு மாணவி யாசினி சேவியர் முதல் பரிசு பெற்றார். திருச்சி, செயின்ட் அன்னீஸ் மக ளிர் மேல்நிலைப் பள்ளியின்பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி எஸ். அபிநயா இரண்டாம் பரிசு பெற்றார். கோட் டைக்காடு தூயவள னார் மேல்நிலைப்பள்ளியின் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி டி.ஞான பிரதிஷா மூன்றாம் பரிசு பெற்றார். திருச்சி, பாய் லர் பிளான்ட் மகளிர் மேல்நிலைப்பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவி ஜி. சாருபாலா, மேக்ஸ்வெல் மெட்ரிக்குலேஷன் மேல் நிலைப் பள்ளி பதினோ ராம் வகுப்பு மாணவி சி. பாவனா மற்றும் தஞ்சாவூர் தூய இருதய மேல் நிலைப்பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவி ஆர். ரூபாசிறீ ஆகியோர் ஆறுதல் பரிசு பெற் றனர். கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றி தழ்கள் வழங் கப்பட்டன.

விழாவில் முன்னதாக இப் பாலிடெக்னிக் கல்லூரி துணை முதல்வர் டாக்டர் .ஹேம லதா வரவேற் புரை ஆற்றினார். முதலா மாண்டு கணிதத்துறை பேராசிரியர் .சாந்தி பரிசு பெற்றவர்களின் விவரங் களை அறிவித்தார்.

தொழிலக பயிலக இணைப்புத் துறையின் மேலாளர் ஆர்.அய்யநா தன் நன்றியுரையாற்ற விழா சிறப்பாகவும் இனிதாகவும்  நிறைவுற்றது.

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image