இந்தியா உயிர்த்திருக்க நேரு குடும்பத்தின் தொலைநோக்குத் திட்டமே காரணம் மோடி மீது சிவசேனா சாடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 11, 2021

இந்தியா உயிர்த்திருக்க நேரு குடும்பத்தின் தொலைநோக்குத் திட்டமே காரணம் மோடி மீது சிவசேனா சாடல்

மும்பை, மே. 11- கரோனா பெருந்தொற்றை சமாளித்து இந்தியா இந்த அளவுக்கு உயிர்த்திருக்க நேரு குடும்பத் தின் தொலைநோக்கு திட் டமே காரணம் என்று சிவ சேனா கட்சியின் நாளேடான சாம்னா கூறியிருக்கிறது.

பங்களாதேஷ், பூட்டான், நேபாளம், இலங்கை உள்ளிட்ட நாடுகள் எல்லாம் இந்தியா விற்குஉதவவேண்டிய நிலைக்கு தள்ளிய பிறகும் 20000 கோடி ரூபாயில் பிரத மருக்கான ஆடம்பர மாளி கையுடன் தயாராகும் புதிய நாடாளுமன்றத்தின் கட்டு மானப் பணியில் மோடியும் அவரது அரசும் மூழ்கி இருப் பது வேதனையளிக்கிறது.

மோடி அரசின் தவறான கொள்கைகள் காரணமாக பாகிஸ்தான், காங்கோ, ருவான்டா போன்ற நாடு களின் வரிசையில் இந்தியா வும் உலக நாடுகளின் உத வியை  நாடி நிற்கவேண்டிய நிலைக்கு வந்த பின்னும் அதற் காக இவர்கள் வருத்தப்படு பவர்களாக தெரியவில்லை.

உலகில் உள்ள பெரும் பாலான நாடுகள் இந்தியா வுக்கு உதவ முன்வரவேண்டும் இல்லையென்றால் இந்தியா வில் ஏற்பட்டிருக்கும் நிலை யால் உலகமே சின்னாபின்ன மாகிவிடும் என்று யுனிசெப் நிறுவனம் எச்சரித்திருக்கிறது.

இரண்டாம் அலையிலி ருந்து தப்பிப் பிழைக்க உலகம் எதிர்நீச்சல் போட்டுக்கொண் டிருக்கும் வேலையில் மூன் றாம் அலை குறித்து நிபுணர் கள் எச்சரிக்கை விடுத்துள்ள னர். மத்தியில் ஆளும் பாஜக-வோ, இந்த எச்சரிக்கை எதை யும் பொருட்படுத்தாமல் மம்தா உள்ளிட்ட எதிர்கட்சியினரை வம்புக்கு இழுப்ப தையே முழுநேர தொழிலாக கொண்டு செயல்பட்டு வரு கின்றனர்.

உலகளவில் அய்ந்தில் ஒரு பங்கு கரோனா நோயாளிகள் இந்தியாவில் உள்ளனர், கடந்த பத்து நாட்களில் மட் டும் 36,110 பேர் இறந்திருக் கின்றனர், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு மணி நேரத்துக்கு 150 பேர் இறக்கின்றனர். உயிரிழப்பில் அமெரிக்கா மற்றும் பிரே சிலை குறுகிய காலத்தில் கடந்திருப்பது கண்டு உல கமே அச்சமடைந்திருக்கிறது.

பெருந்தொற்றால் ஏற்பட் டிருக்கும் பொருளாதார பாதிப்பை பொருட்படுத்தா மல் இந்தியாவுக்கு பயணம் செய்யவேண்டாம் என்று பல நாடுகள் தங்கள் குடிமக்களை அறிவுறுத்தியுள்ளது.

பண்டித நேரு, இந்திரா காந்தி, மன்மோகன் சிங் உள் ளிட்ட பிரதமர்கள் கடந்த 70 ஆண்டுகளில் உருவாக்கிய கட்டமைப்பை கொண்டே நாடு இந்த அசாதாரண சூழலை சமாளித்து வருகிறது..

தற்போதைய இந்த அசா தாரண சூழலை சமாளிக்க தேவையான வளர்ச்சிப் பணி கள், திட்டங்களை வழங்கி மக்களுக்கு நம்பிக்கை வழங்கி காத்து வரும் முன்னாள் பிர தமர்கள் ஜவாஹர்லால் நேரு, லால்பகதூர் சாஸ்திரி, இந் திரா காந்தி, ராஜீவ் காந்தி, பி.வி. நரசிம்ம ராவ், மன் மோகன்  சிங் ஆகியோரின் அர்ப்பணிப்பு உணர்வுக்கு நன்றி என்று சிவசேனா தனது சாம்னா நாளேட்டில் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment