தடுப்பூசி, ஆக்சிஜன் வசதியை கண்காணித்திட ஆறு உயரதிகாரிகள் நியமனம் தமிழக அரசு உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 11, 2021

தடுப்பூசி, ஆக்சிஜன் வசதியை கண்காணித்திட ஆறு உயரதிகாரிகள் நியமனம் தமிழக அரசு உத்தரவு

 சென்னை,மே11- தமிழகம் முழு வதும் மருத்துவமனைகளில் படுக்கை வசதி, ஆக்சிஜன், தடுப்பூசி விவரங்களை கண் காணிக்க ஏற்படுத்தப்பட்டு உள்ள கரோனா கட்டளை மய்யத்துக்கு புதிதாக 5 அய்ஏ எஸ் அதிகாரிகள் உட்பட 6 உயரதிகாரிகளை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்துவருவதை தொடர்ந்து, ‘கரோனா கட் டளை மய்யம்அமைக்க முதல்வர் மு..ஸ்டாலின் உத் தரவிட்டார். அதன்படி, அரசு, தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன், படுக்கை வசதி, தடுப்பூசியின் தேவை மற்றும் இருப்புஆகியவற்றில் அனைத்து மாவட்டங்களை யும் ஒருங்கிணைக்கும் வித மாக ஒருங்கிணைந்த கரோனா கட்டளை மய்யம் அமைக்கப் பட்டுள்ளது. தற்போது அந்த கட்டளை மய்யத்துக்கு புதி தாக 5 அய்ஏஎஸ் அதிகாரி களையும், மாவட்ட வருவாய் அதிகாரியையும் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

இதுதொடர்பாக தலை மைச் செயலர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ள அரசாணை யில் கூறப்பட்டுள்ளதாவது:

ஒருங்கிணைந்த கரோனா கட்டளை மய்யத்தால் மேற் கொள்ளப்படும் பல்வேறு முக்கியப் பணிகளை கண்கா ணிக்க ஒருங்கிணைப்பு அதி காரிகள் நியமிக்கப்பட்டுள்ள னர். அதன் விவரம்:

ஒட்டுமொத்த பணிகள் ஒருங்கிணைப்பு - தமிழ்நாடு தொழில் வழிகாட்டி செயல் இயக்குநர் டாக்டர் தாரேஷ் அகமது. மாநில அளவில் மருத்துவ ஆக்சிஜன் கண்கா ணிப்பு - டிஎன்பிஎஸ்சி செய லர் கே.நந்தகுமார். அரசு, தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதி கண்காணிப்பு - சென்னை கூடுதல் ஆட்சியர் டாக்டர் எஸ்.உமா.

சென்னை மருத்துவமனை களில் கள ஆய்வு - தமிழ்நாடு மின் உற்பத்தி, மின் விநியோக கழக இணை நிர்வாக இயக் குநர் எஸ்.வினித். சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளில் கரோனா சிகிச்சை மேற் கொள்ளப்படும் அரசு மருத் துவக் கல்லூரிகளில் கண் காணிப்பு - தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழக செயல் இயக்குநர் டாக்டர் கே.பி. கார்த்திகேயன். கரோனா கட்டளை மய்ய தரபராமரிப்பு -தமிழ்நாடுஃபைபர்நெட் கார்ப்பரேஷன்பொது மேலாளர் ஆர்.அழகுமீனா ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment