புதுச்சேரி பெரியார் பெருந்தொண்டர் த.கண்ணன் படத்திறப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 3, 2021

புதுச்சேரி பெரியார் பெருந்தொண்டர் த.கண்ணன் படத்திறப்பு

புதுச்சேரி, மே 3- புதுச்சேரி திராவிடர் கழகம் சார்பில் புதுச்சேரி பெரியார் பெருந்தொண்டர் .கண்ணன் படத் திறப்பு 29.04.2021 அன்று  காலை 10 மணியளவில் புதுச்சேரி லபோர்த் வீதி பி.எம்.எஸ்.எஸ்.எஸ். ஹாலில் நடைபெற்றது.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகியோர் காணொலி மூலம் நினைவுரையாற் றினார்கள்.

புதுச்சேரி நகராட்சி திராவிடர் கழக செயலாளரும், புதுச்சேரி சட்டக் கல்லூரி ஆட்டோ சங்க செயலாளரும், விடுதலைப் போராட்ட தியாகி நா. தனபால் அவர்களின் இளைய மக னும், மொழிப் போர் தியாகி, சட்ட எரிப்பு போராட்ட வீரர், மயிலாடு துறை ஒன்றிய  கழக செயலாளராக திறம்பட பணியாற்றிய சுயமரியாதைச் சுடரொளி பெரியார் பெருந்தொண் டர் மயிலாடுதுறை நா.வடிவேல் அவர்களின் மருமகனுமாகிய தோழர் கண்ணன் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி 29.4.2021 அன்று காலை 10 மணியளவில் புதுச்சேரி லபோர்த் வீதி பி.எம்.எஸ்.எஸ்.எஸ். ஹாலில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு புதுச்சேரி மாநில திராவிடர் கழகத் தலைவர் சிவ. வீர மணி தலைமை தாங்கினார். கண்ணன் அவர்களின் மகன் . வீரமணி  வர வேற்புரையாற்றினார். கண்ணன் வாழ்விணையர் பானுமதி, இளைய மகன் . செல்லமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திராவிடர் கழக பொதுச் செயலா ளர் முனைவர் துரை.சந்திரசேகரன் மறைந்த தோழர் .கண்ணன் அவர் களின் படத்தினை திறந்துவைத்து உரையாற்றினார்.

காணொலியில் கண்ணன் குடும் பத்தினர்,  உறவினர்கள், கழகத் தோழர்கள், தோழமை இயக்க தோழர்கள்,  ஆட்டோ ஓட்டுநர்கள், ஆட்டோ சங்க நிர்வாகிகள் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் இணைந்து முன்னிலை வகித்தனர். 

மறைந்த .கண்ணன் அவர்கள் ஒரு ஆட்டோ ஓட்டுநராக இருந்து தனது மகன்கள் இருவரையும் படிக்க வைத்து, நல்ல நிலையில் பணிபுரி வதையும், அதற்கு உறுதுணையாக இருந்த அவரது வாழ்விணையர் பானுமதி கண்ணன், கழக பணியில் தனது மாமனார் வடிவேல் போலவே மிகச் சிறப்பாக பணியாற்றியதையும் மற்றும் பல்வேறு நிகழ்வுகளையும் சுட்டிக்காட்டி கழகப்பொதுச்செயலா ளர் முனைவர் துரை.சந்திரசேகரன் நினைவேந்தல் உரையாற்றினார்.

அடுத்து காணொலி மூலம் திரா விடர் கழகத் துணைத் தலைவர் கவி ஞர் கலி. பூங்குன்றன் பல்வேறு நிகழ் வுகளை நினைவு கூர்ந்தார். குறிப்பாக .கண்ணன் அவர்களின் மாமனார் வடிவேல் அவர்களின் சிறப்பான பணியை பற்றியும், தொண்டினை பற்றியும் பகிர்ந்து கொண்டார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் காணொலி உரையில், . கண்ணன் அவர்களின் குடும்பத்தை பற்றியும்,  தலைமுறை தலைமுறையாக இந்த குடும்பம்  கழக குடும்பமாக இருந்து வருவதைப் பற்றியும் சிறப் பாக எடுத்துக் கூறினார். கண்ணன் - பானுமதி அவர்களின் திருமணத்தை நடத்தி வைத்ததையும், கண்ணனின் மகனின் திருமணத்தை தலைமை தாங்கி நடத்தி வைத்ததையும் இரங் கல் உரையில் நினைவுகூர்ந்தார். கண் ணனை இழந்து வாடும் குடும்பத்தின ருக்கும், புதுச்சேரி இயக்கத் தோழர் களுக்கும் ஆறுதல் கூறி, கண்ணனைப் போல் பல கழகச் செயல்வீரர் கண் ணன்களாக உருவாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். விழா விற்கு வந்திருந்த அனைவரும் உரையினை கவனமாக கேட்டனர்.

முன்னதாக . கண்ணன் அவர் களின் அண்ணன் கோவிந்தராஜ், மயி லாடுதுறையின் கழக நகர செயலாளர் நாகரத்தினம், வீரமணியின் நண்பர் கு.சுதாகர், கண்ணனின் அண்ணன் மகன் கு.நந்தகுமார், நண்பர் சந்திர மவுலி, புதுவை சிவ. வீரமணி, புதுச் சேரி கழக பொதுக்குழு உறுப்பினர் விலாசினி இராசு, வீர. மோகன், புதுவை சிவம் அவர்களின் மகன் முனைவர் சிவ. இளங்கோ, மேனாள் புதுச்சேரி கழக செயலாளர் வே. அன்பரசன், புதுச்சேரி மண்டல கழக தலைவர் இரா. சடகோபன் ஆகி யோர் நினைவேந்தல் உரையாற்றி னார். உழவர்கரை நகராட்சி கழக அமைப்பாளர் தோழர் . சிவராசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

நிகழ்வில் புதுச்சேரி மண்டல கழக  அமைப்பாளர் இர. இராசு, கே.குமார், பகுத்தறிவாளர் கழக புதுச்சேரி மண் டல  தலைவர் கைலாச. நெ. நடராசன், துணைத் தலைவர் ஆடிட்டர் கு.ரஞ்சித்குமார், கண்ணனின் அண்ணன் பரமசிவம் () ஜெயபாலன் குடும்பத் தினர், மைத்துனர்கள் மயிலாடுதுறை குலோத்துங்கன், நெப்போலியன், மாசேதுங் குடும்பத்தினர், மைத்துனி வளர்மதி குடும்பத்தினர்,  கண்ணன் அவர்களின் அக்காக்கள் மகன்கள், மகள் மற்றும் குடும்பத்தினர், சம்பந்தி வீட்டார் .பிரசன்னா,  .மோகன், தோழர் தீனா, ஆனந்தி, பரத், சிவக் குமார், எட்வர்ட், புதுச்சேரி இரா.சடகோபன், புதுச்சேரி பகுத்தறி வாளர் கழக மேனாள் செயலாளர் கோமு. தமிழ்ச்செல்வன், இரா. சாம்ப சிவம், புதுச்சேரி நகராட்சி தலைவர் ஆறுமுகம், பெரியார் பெருந்தொண் டர் தட்சிணாமூர்த்தி, அரியாங்குப்பம் நெடுஞ்செழியன் புதுச்சேரி கழக பொதுக்குழு உறுப்பினர் லோ. பழனி, சிஅய்டியு செயலாளர் பிரபுராஜ், சுதானா நகர் முருகன்,  இளம்பரிதி, லோகேஸ்வரன், வில்லியனூர் கு.உலகநாதன், சீனு.சந்திரசேகரன், பெரியார் பெருந்தொண்டர்கள் இரு சாம்பாளையம் இளங்கோவன், வட லூர் புலவர் ராவணன், பாவேந்தர் விரும்பி அண்ணா பேரவை சிவ. இள.கோவலன், பொறியாளர் சக்தி வேல், தமிழர் தையலகம் குமார், புதுச் சேரி மண்டல இளைஞரணி தலைவர் திராவிட. ராசா, அரியாங்குப்பம் கொம்யூன் கழக தலைவர் இரா. ஆதி நாராயணன், கா.நா.முத்துவேல், பொதுப்பணித்துறை ஊழியர் ஞான வேல், வாணரப்பேட்டை ராஜா, புதுச்சேரி சட்டக்கல்லூரி ஆட்டோ சங்க தோழர்கள் ராஜா, ரவி, ஆரோக் கியநாதன், நாராயணன், கோவிந்தன், வசந்த் அண்ட் கோ ஆட்டோ சங்கம் இரா‌.அந்தோணிராஜ், புதுச்சேரி அரசு ஊழியர் அய்க்கிய பேரவை மாநில அமைப்பாளர் கோவிந்தராஜ், உழவர்கரை நகராட்சி தி.. அமைப் பாளர் சிவராசன் மற்றும் பல்வேறு ஆட்டோ சங்கங்களின் பொறுப்பா ளர்கள், தோழர்கள், கண்ணனின் உறவினர்கள், நண்பர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் நிகழ்ச்சியினை நேரலை மூல மாக உறவினர்களும், நண்பர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இறு தியாக கண்ணனின் இளைய மகன் செல்லமணி நன்றி நவின்றார்.

No comments:

Post a Comment