மேற்குவங்கத் தேர்தல் வெற்றி-சிவசேனா பாராட்டு

கல்கத்தா, மே 3- மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் முன்பைவிட அதிக இடங்களைப் பெற்றதற்கு, சிவசேனா கட்சி பாராட்டு தெரிவித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில்  திரிணாமுல் காங்கிரஸ் 225  இடங்களை பெற்றுகொண்டு உள்ளது.  பாஜக 78 இடங்க ளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.  இம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்துக்கு பிர தமர் மோடி, அமித் ஷா உள் ளிட்ட பல பாஜகவினர் முகா மிட்டும் பாஜக வெற்றியை அடையவில்லை.

நந்திகிராம் தொகுதியில் முதலில் மம்தா வெற்றி பெற்ற தாக அறிவித்த தேர்தல் ஆணை யம் பிறகு அவர் தோல்வி அடைந்ததாக அறிவித்தது, இருப்பினும் தனது வெற்றி தோல்வி பிரச்சினை இல்லை, வங்கமக்களின் நலனுக்காக நான் உழைப்பேன் என்று மம்தா கூறியிருந்தார்.

இந்நிலையில் சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ரவுத், ”மோடி மற்றும் அமித்ஷா யாராலும் வெல்ல முடியா தவர்கள் என்பது தவறு என மம்தா தெளிவாக அறிவித்துள்ளார்.  அவர்களும் மம்தாவால் தோற்கடிக் கப்பட்டுள்ளனர்என மம் தாவுக்கு பாராட்டு தெரிவித் துள்ளார்.

Comments