ஏட்டுத் திக்குகளிலிருந்து...

 டெக்கான் கிரானிக்கல், சென்னை:

·     கரோனா தடுப்பூசியை அனைத்து மக்களுக்கும் அளிப்பது ஒன்றுதான் இந்தியாவில் கரோனா பரவலைத் தடுக்கும் என அமெரிக்க சுகாதார நிபுணர் மருத்துவர் அந்தோனி பவ்சி தெரிவித்துள்ளார்.

·     தமிழகத்திற்கு அதிகமான தடுப்பூசிகளையும், ஆக்சிஜன் விநியோகமும் மத்திய அரசு உடனடியாக அளித்திட சென்னை உயர் நீதிமன்றம் மத்திய அரசை அறிவுறுத்தியுள்ளது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     இந்தியாவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட கரோனா வைரஸின் பி-1617 மாறுபாடு உலக அளவில் "கவலை அளிக்கத்தக்க வைரஸ் மாறுபாடு" என உலக சுகாதார அமைப்பால் (கீபிளி) வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அமைப்பின் கோவிட்-19 தொழில்நுட்ப முன்னணி டாக்டர் மரியா வான் கெர்கோவ் தெரிவித்தார்.

·     அடையாளம் காணப்படாத டஜன் கணக்கான கோவிட் பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் கங்கையில் மிதந்து வருவதால் பீகாரில் மக்கள்  பீதியடைந்துள்ளனர்.

பி.பி.சி. நியூஸ் தமிழ்:

·             புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கரோனா பாதிப்பால் சென்னையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அம் மாநிலத்திற்கு பாஜகவைச் சேர்ந்த 3 பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களை மத்திய அரசு நியமித்துள்ளது. இதன் மூலம் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 6இல் இருந்து 9 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி யில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் 10 தொகுதிகளில் வென்றுள்ளது.

- குடந்தை கருணா

11.5.2021

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image