இனமானப் போராளி நம் இளவழகனார்க்கு நமது வீரவணக்கம்

சீரிய பெரியார் கொள்கை பிடிப்பாளரும் தமிழ் இன உணர்வு, திராவிடர் இலட்சிய வேட்கை நிறைந் தவராக இறுதி மூச்சடங்கும் வரை வாழ்ந்த, தமிழ்மண் பதிப்பாளரும் அருமை கொள்கைத் தோழருமான உரத்தநாடு இளவழகன் அவர்கள், சென்னை மருத்துவமனையில் - உடல் நலக்குறைவு காரணமாக காலமானார் என்பதை அறிந்து மிகுந்த வேதனை யும் துயரமும் அடைகிறோம்.

சிறிது காலமாகவே உடல் நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர்; இன்று விடியற்காலை (4.5.2021) மறைந்தார் என்ற செய்தி, திராவிடர் எழுச்சி வரலாற்றில் ஒரு மீளாத் துயரச் செய்தி; காரணம் தமிழ் அறிஞர்களின் அத்துணை நூல்களையும் கொத்துக் கொத்தாக தேடிப்பிடித்து பதிப்பித்து, பல லட்சம் நட்ட மானாலும் அதையும் தாங்கி, தளராது அம்முயற் சியில் உறுதியாக இருந்தவர் - ஈடு செய்ய இயலாத இழப்பு இது!

அறிஞர் அண்ணாவின் நூல்களை பல தொகுப்புகளாக வெளியிட்டுலட்சிய வெறியுடன், திராவிடர் கொள்கை நெறிபரப்பிட உழைத்த இனமானப் போராளி அவர்.

அவரை இழந்து வாடும் அவரது இணையர் வளர்மதி, மகன் .இனியன், மருமகள் இராசேசுவரி, மகள் .தமிழ முது, மருமகன் .கலைமுருகன் மற் றும் அவரது குடும்பத்து உறவுகள், கொள்கை உறவுகள் அனைவருக்கும் நமது ஆழ்ந்த இரங் கலும் ஆறுதலும்.

அவருக்கு நமது வீரவணக்கம்.

(கி.வீரமணி)

தலைவர்,

திராவிடர் கழகம்

4.5.2021              

சென்னை      

குறிப்பு: இன்று மாலை உறந்தைராயன் குடிக் காட்டில் உடலடக்கம் செய்யப்படவுள்ளது.

Comments