ஏட்டுத் திக்குகளிலிருந்து...

 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

·     அய்ந்து மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் மேற்கு வங்கம், கேரளம் மற்றும் தமிழ் நாட்டில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்று மோடி தலைமையிலான பாஜகவிற்கு தேசிய அளவில் பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளன என தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

·     மேற்கு வங்கத்தில் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் வரலாறு காணாத வெற்றியைப் பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை தொடர்கிறது. தேசிய அளவில் அரசியல் களத்திற்கான மாற்றமாக இந்த வெற்றி திகழும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

·     மோடி - அமித் ஷா கூட்டணியின் அரசியல் வியூகத்தை உடைத்து மம்தா பெற்ற வெற்றி மேற்கு வங்கத்தோடு நிற்காது. மத்தியிலும் நடைபெறும் என எழுத்தாளர் சிகா முகர்ஜி கருத் திட்டுள்ளார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     தேர்தலுக்கு முன்பாக திரிணாமுல் காங்கிரசில் இருந்து பாஜகவிற்கு தாவி தேர்தலில் நின்ற பலரும் தோல்வியைச் சந்தித்துள்ளனர்.

தி டெலிகிராப்:

·     மேற்கு வங்கத்தில் மம்தாவுடன் மக்களும் இணைந்து மோடி - அமித் ஷா, தேர்தல் ஆணையம் மற்றும் மதவாத அரசியலை வீழ்த்தியுள்ளனர்.

·     மோடி - அமித் ஷா அரசியல் தோல்வியைத் தழுவியது குறித்து பாஜகவில் பலரும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர்.

·     .பி.யில் கரோனா தொற்றால் இறந்தவர்களின் உடலை எரிக்க மயானம் முன்பாக நீண்ட வரிசையை ஊடகத்திடம்  இருந்து மறைக்க யோகி அரசு, மயானம் முன்பாக தட்டிகளைக் கொண்டு மறைத்து வருகிறது..

- குடந்தை கருணா

3.5.2021

Comments