பாராட்டி வரவேற்கத்தக்க தேர்வுகள்

தமிழக சட்டப் பேரவைத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலில், தி.மு.. சார்பில் பேரவைத் தலைவராக திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட மு.அப்பாவு அவர்களும் - துணைத் தலைவராக திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கு.பிச்சாண்டி அவர்களும் போட்டியிட்டனர்.

கொள்கைத் தெளிவும், நிறைந்த சட்டமன்ற அனுபவமும் பெற்றவர்கள் இருவரும்  - சிறப்பான தேர்வு; சிறுபான்மை சமுதாயத்திற்கும் உரிய முக்கியத்துவம் அளித்து சபாநாயகர், துணை சபாநாயகர்களாக தி.மு.. தலைமை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று நடைபெற்ற சட்டப் பேரவை தொடரில் சட்டப் பேரவை தலைவராக திரு. மு. அப்பாவு  அவர்களும்,  துணைத் தலைவராக திரு. கு. பிச்சாண்டி அவர்களும் தேர்தலில்  போட்டியின்றி தேர்வாகியுள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

 கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை      

11-5-2021          

 

Comments