செய்தியும், சிந்தனையும்....!

 தன்னம்பிக்கை இல்லாதவர்களுக்குக் கடவுள் நம்பிக்கை

கேள்வி: மனிதனுக்கு கடவுள்மீது எப்போது முழு நம்பிக்கை வருகிறது?

பதில்: மற்ற அனைத்து நம்பிக்கைகளையும் இழந்த பிறகு ('துக்ளக்' 19.5.2021) 

சிந்தனை:  தன்னம்பிக்கை பற்றி எந்தநிலையிலும் 'துக்ளக்'குகள் இனி எழுதக் கூடாது.

ஆமாம் 'புரோக்கர்' தான்

கேள்வி: 'மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு' என்கிற போது தி.மு..வின் வெற்றியை நீங்கள் ஏற்க மறுப்பது ஏன்?

பதில்: ஸ்டாலினின் வெற்றியை, மக்கள் தீர்ப்பு என்று ஏற்று அவருக்கு வாழ்த்துக் கூறி விட்டேன். ஆனால் அதை மகேசன் தீர்ப்பு என்று நான் ஏற்கவில்லை. மக்கள் செய்த தவறுக்கு மகேசன் மேல் பழி போட நான் அரசியல்வாதியல்ல.  

சிந்தனை:  மகேசனாவது மண்ணாங்கட்டியாவது- அதெல்லாம் 'டு பாக்கூர்' என்று குருமூர்த்தி கும்பல் ஒப்புக் கொண்டு விட்டதே!

தந்தை பெரியாரைப் பின்பற்றவில்லையா?

கேள்வி: தி.மு..விடம் உங்களுக்குப் பிடித்தமான ஏதாவது கொள்கை உண்டா?

பதில்: தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று தூற்றிய .வெ.ரா.வை தந்தை என்று ஒருபுறம் தி.மு.. போற்றினாலும், மறுபுறம் அது தமிழின் பெருமையைப் போற்றுவது எனக்குப் பிடித்திருக்கிறது.   ('துக்ளக்' 19.5.2021 )  

சிந்தனை:  தமிழ்மொழி காட்டுத் தன்மையிலிருந்து விடுபட்டு, விஞ்ஞான மொழியாக வேண்டும் என்று விரும்பிய தந்தை பெரியாரின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தைத்தான் 'துக்ளக்' பின்பற்றி வருகிறதே!

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image