தளபதி மு.க. ஸ்டாலினை சந்தித்து தமிழர் தலைவர் சால்வை அணிவித்து வாழ்த்து

தி.மு.. தலைவரும் வரும் 7ஆம் தேதி முதல் அமைச்சர் பதவியை ஏற்க இருக்கக் கூடியவருமான தளபதி மு.. ஸ்டாலின் அவர்களை இன்று (4.5.2021) காலை 10 மணிக்கு, அவரது இல்லத்தில் சந்தித்து சால்வை போர்த்தி நூல்களையும் பரிசளித்து வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி வீரமணி.

அரசியல் நிலைமை - கரோனா மற்றும் சந்திக்க இருக்கும் மக்கள் பிரச்சினைகள் பற்றி 15 நிமிடங்கள் உரையாற்றி திராவிடர் கழகத் தலைவர் விடை பெற்றார்.

கழகத் தலைவரை வரவேற்று வெளியில் வரை வந்து வழியனுப்பி வைத்தார் முதல் அமைச்சராகப் பதவி ஏற்கவிருக்கும் தளபதி மு.. ஸ்டாலின் அவர்கள். தி.மு.. பொருளாளர் டி.ஆர். பாலு, முதன்மைச் செயலாளர் கே.என். நேரு ஆகியோரும் உடனிருந்தனர்.

கழகத் தலைவருடன் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.

Comments