வெற்றி பெற்ற தி.மு.க. உறுப்பினர்கள் பெரியார் திடலுக்கு வருகை: கழகத் தலைவர் வாழ்த்து

 

தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.. சட்டமன்ற உறுப்பினர்கள் துரை.சந்திரசேகரன் (திருவையாறு), நீலமேகம் (தஞ்சை), .பொன்முடி (திருக்கோவிலூர்), புகழேந்தி (விக்கிரவாண்டி) ஆகியோர் தமிழர் தலைவருக்குச் சால்வை அளித்து வாழ்த்துப் பெற்றனர். கழகத் தலைவர் அவர்களுக்கெல்லாம் "திராவிடம் வெல்லும்" என்ற இயக்க நூலை வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார். கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், டாக்டர் பொன்.கவுதம சிகாமணி எம்.பி. ஆகியோர் உடனிருந்தனர் (சென்னை பெரியார் திடல், 4.5.2021)

தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.. சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டுக்கோட்டை கா.அண்ணாதுரை, கும்பகோணம் தொகுதி சாக்கோட்டை .அன்பழகன் ஆகியோர் தமிழர் தலைவரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். (சென்னை பெரியார் திடல், 4.5.2021)

தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.. சட்டமன்ற உறுப்பினர் திருவிடைமருதூர் கோவி.செழியன் தமிழர் தலைவர் அவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். உடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராமலிங்கம், மருத்துவர் செந்தில்குமார் மற்றும் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் உள்ளனர். (சென்னை பெரியார் திடல், 4.5.2021)

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தமிழக சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்கள் திருப்போரூர் தொகுதி எஸ்.எஸ்.பாலாஜி, செய்யூர் தொகுதி பனையூர் பாபு, காட்டுமன்னார் கோவில் தொகுதி எம்.சிந்தனைச் செல்வன், நாகப்பட்டினம் தொகுதி ஆளுர் ஷாநவாஸ் ஆகியோர் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் தலைமையில் நேற்று (3.5.2021) பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்

மக்களவை உறுப்பினர் இரவிக்குமார், வன்னியரசு மற்றும் பொறுப் பாளர்கள் உடன் வருகை தந்தனர். அவர்களை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் வரவேற்று பயனாடை அணி வித்து தந்தைபெரியார் நூல்களை வழங்கி கழகத்தின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

குறிப்பு: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொலைபேசி மூலம்  அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

தேர்தலில் வெற்றி பெற்ற ஆயிரம் விளக்கு தொகுதி தி.மு.. சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா.எழிலன் தமிழர் தலைவர் அவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். (சென்னை பெரியார் திடல், 4.5.2021)

தேர்தலில் வெற்றி பெற்ற தாராபுரம் தொகுதி தி.மு.. சட்டமன்ற உறுப்பினர் கயல்விழி செல்வராஜ் தமிழர் தலைவர் அவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். (சென்னை பெரியார் திடல், 4.5.2021)


Comments