கீழவாளாடி ச.வீரமணி மறைவுக்கு கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை


 இலால்குடி, மே 3- இலால்குடி கழக மாவட்டம் கீழவாளாடி கிளைக்கழகதலைவரும், மண்டலஇளைஞரணி செயலாளர் வீ.அன்புராஜா வின் தந்தையாருமாகிய  .வீர மணி அவர்களின் மறைவை யொட்டி 1.5.2021 அன்று பகல் 12.30 மணியளவில் நடைபெற்ற இரங்கல் கூட் டத்தில் மாநில ..துணைத் தலைவர் .மணிவண்ணன் இரங்கலுரை ஆற்றினார்.

இலால்குடி மாவட்ட தலைவர் தே.வால்டர், மண் டலசெயலர் .ஆல்பர்ட், திருச்சி மாவட்டத்தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், மாவட்ட செயலர் மோகன் தாஸ்,  ..மாவட்ட துணைத் தலைவர் மா.சுப்ரமணியன், துறையூர் நகர ..பொருளா ளர் குமரவேல், உடுக்கடி அட்டலிங்கம், இலால்குடி ஒன்றிய செயலாளர் பிச்சை மணி, புள்ளம்பாடி தலைவர் திருநாவுக்கரசு, கவிஞர் பொற் செழியன், அரங்கநாயகி அம் மாள், காட்டூர் கனகராசு, பிச்சாண்டார்கோயில் காமராஜ், பாச்சூர் அசோகன், இலால்குடி சட்டமன்ற உறுப் பினர் சவுந்தரபாண்டியன் மற்றும் கழக தோழர்கள் மரியாதை செலுத்தினர்.

Comments