மறைவு

திருப்பூர் வருவாய் மாவட்டம், தாராபுரம் கழக மாவட்டம், தாராபுரம் நகர திராவிடர் கழக தலைவர் மு.சங்கரின் தந்தையார் முனியப்பன் (வயது 82), உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 28.4.2021 அன்று இரவு 9.00 மணிய ளவில் தாராபுரம் வடதாரை பகுதியிலுள்ள தனது இல்லத்தில் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம்.

தாராபுரம் கழக மாவட்ட,நகர, ஒன்றிய கழக, .. தோழர்கள் சென்று இரங்கல் தெரிவித்தனர். தாராபுரம் கழக மாவட்ட தலைவர் .கிருஷ்ணன், செயலாளர் .சண்முகம், தாராபுரம் நகர செயலாளர் .மணி, ஒன்றிய தலைவர் நாத்திக சிதம்பரம், செயலாளர் முருகன், பகுத்தறிவாளர் கழகத்தை சேர்ந்த திரா விடன், பெரியார் நேசன், மாரிமுத்து, முருகேஷ், மாரியப்பன் உள்ளிட்ட கழக தோழர்கள் இறுதி நிகழ்வில் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

Comments